பிப்ரவரி 1 முதல் புதிய கட்டணம் வசூலிக்கப்படும் ஆட்டோ ஓட்டுநர்கள் அறிவிப்பு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஜன. 27–- வரும் 1ஆம் தேதியிலிருந்து முதல் 1.8 கி.மீ.-க்கு ரூ.50 வசூலிக்கப்படும் என ஆட்டோ ஓட்டுநர்கள் அறிவித்துள்ளனர்.

அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டி.ஏ.ஜாஹீர் ஹுசைன் கூறியதாவது:
கடந்த 12 ஆண்டு களாக ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப் படாததால், ஓட்டுநர்கள் சார்பில் பிப். 1ஆம் தேதி முதல் புதிய கட்டணம் வசூலிக்கப்படும்.

அதன்படி, முதல் 1.8 கி.மீ-க்கு ரூ.50, கூடுதல் கிமீ-க்கு ரூ.18, காத்திருப்பு கட்டணம் ரூ.1.5 என்ற வகையில் வசூலிக்கப்படும்.

இந்த கட்டணத்தின் படியே தற்போது கிளாம்பாக்கத்திலிருந்து ப்ரீபெய்டு ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.
இந்த கட்டணத்தை உரிமைக் குரல் உள்ளிட்ட கூட்டமைப்பு சங்கங்களைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் பின்பற்றுவார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *