சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 5 புதிய அரசு குற்றவியல் வழக்குரைஞர்கள் நியமனம்! தமிழ்நாடு அரசு உத்தரவு!

1 Min Read

சென்னை, மே 23- சென்னை உயர் நீதி மன்றத்தில் குற்றவியல் வழக்குகளில் ஆஜராவ தற்காக 5 புதிய அரசு வழக்குரைஞர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் த.வெ.க. புதிய ஆட்சியை அமைத்ததைத் தொடர்ந்து, முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அரசு வழக்குரைஞர் களாகப் பணியாற்றி வந்த அனைவரும் தங்களது பதவிகளிலிருந்து விலகினர்.

இதனைத் தொடர்ந்து, தவெக வழக்குரைஞர்கள் அணியில் இருந்து புதிய அரசு வழக்குரைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

புதிய வழக்குரைஞர்கள் நியமனம்

தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் கோடை விடுமுறை கால நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், குற்றவியல் வழக்குகளில் ஆஜராவதற்கு போதிய எண்ணிக்கையில் அரசு வழக்குரைஞர்கள் இல்லாத நிலை ஏற்பட்டது.

இதனைக் கருத்தில் கொண்டு, தற்காலிகமாக புதிய வழக்குரைஞர்களை நியமிக்குமாறு அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் அரசுக்கு அவசரப் பரிந்துரை செய்தார்.

அட்வகேட் ஜெனரலின் பரிந்துரையை ஏற்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்காலிகமாக ஆஜராவதற்கு 5 புதிய குற்றவியல் வழக் குரைஞர்களை நியமித்து தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் கே.மணிவண்ணன் அதிகாரப்பூர்வ ஆணை பிறப்பித்துள்ளார்.

நியமிக்கப்பட்டுள்ள புதிய வழக்குரைஞர்களின் பட்டியல்:
ஆர்.கணேஷ்குமார் ஏ.அமர்நாத்
எஸ்.யோகராஜா சேகர் சி.ஆர்.மலர்வண்ணன் ஆர்.ராஜசேகர் இந்த தற்காலிக நியமனத்தின் மூலம் விடுமுறை கால நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குகள் தொய்வின்றி நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *