பா.ஜ.க.வை முந்திய ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ 5 நாட்களிலேயே ஒன்றரை கோடி பாலோயர்ஸ்; 3 லட்சம் பேர் உறுப்பினர்களாகவும் சேர்ந்தனர்

புதுடில்லி, மே 22 கடந்த மே 16 ஆம் தேதின்று மூத்த வழக்குரைஞர் தகுதி கோரிய, வழக்குரைஞரின் மனு தொடர்பான விசாரணையின் போது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த்,”வேலையில்லாத சில இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் போல செயல்பட்டு கரப்பான்பூச்சி போல அமைப்பை தாக்குகின்றனர்” என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.

மக்களின் கருத்துகளுக்கும், கருத்துரி மைக்கும் மதிப்பளிக்க வேண்டிய உச்சநீதி மன்றத்தின் தலைமைப் பதவியில் இருப்பவரே, இளைஞர்களை கரப்பான் பூச்சிகளுடன் ஒப்பிட்டது நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் கண்டனம் குவிந்தன. சமூகவலைத் தளங்களில் ‘மீம்ஸ்’கள் அனல் பறந்தன. இதனால் பதற்றமடைந்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், ‘‘தான் பொதுவாக இளைஞர்களைச் சொல்லவில்லை. வேலையில்லாத இளைஞர்களைத்தான் அப்படி குறிப்பிட்டேன். கரப்பான் பூச்சிகள் போன்ற சமூக ஒட்டுண்ணிகள் என்று கூறி னேன்” என விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், தலைமை நீதிபதியின் இந்தப் பேச்சுக்குப் பதிலடி கொடுக்கும் வகை யில், அரசியல் வர்ணனையாளராக இருக்கும் அபிஜித் தீப்கே தனது சமூக வலைதளத்தில், “அனைத்துக் கரப்பான் பூச்சி எல்லாம் ஒன்று சேர்ந்தால் நிலைமை என்னவாகும்?” என பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவுக்கு மிகப்பெரிய அளவிற்கு ஆதரவு பெருகியது. இதன் தொடர்ச்சியாக “காக்ரோச் ஜனதா கட்சி (கரப்பான் பூச்சி கட்சி – cockroach janta party)” மே 16 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. அபிஜித் தீப்கே தான் கரப்பான் பூச்சி கட்சியை உருவாக்கினார்.

பா.ஜ.க.வை பின்னுக்குத் தள்ளிய கரப்பான் பூச்சி

‘டுவிட்டர்’, ‘எக்ஸ்’, ‘முகநூல்’, ‘இன்ஸ்டா கிராம்’ உள்ளிட்ட சமூகவலை தளங்களில் ‘கரப்பான் பூச்சி கட்சி (cockroach janta party – @Cock roach4India)’ என்ற பெயரில் இருக்கும் இந்தக் கட்சி, பா.ஜ.க.வை பின்னுக்குத் தள்ளியுள்ளது. ‘இன்ஸ்டாகிராமில்’ @cockroachjantaparty என்ற ஹேண்டிலில் இயங்கி வரும், இந்தக் கணக்கு, நேற்று (21.5.2026) 15 மில்லியன், அதாவது 1.5 கோடி ‘பாலோயர்களைத்’ தாண்டியது. வெறும் 56 போஸ்ட்களை மட்டுமே போட்டுள்ள இந்த இணைய கட்சி, பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தையே பின்னுக்குத் தள்ளியுள்ளது, மோடி – அமித்ஷாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில், இன்ஸ்டா கிராம் பக்கத்தில் இப்போது இந்தியாவிலேயே அதிக பலோயர்ஸ் கொண்ட அரசியல் பக்கமாக இந்தக் கரப்பான் பூச்சி ஜனதா உள்ளது. காங்கிரஸ் 13.2 மில்லியன் பாலோயர்களுடன் 2 ஆவது இடத்தில் உள்ளது. பா.ஜ.க. 8.7 மில்லியன் பாலோயர்கள் உடன் 3 ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் மட்டு மின்றி முகநூல், டுவிட்டர் எக்ஸ் பிரிவுகளிலும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அதிக உறுப்பினர்களைக் கொண்ட பிரபல கட்சியாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக கரப்பான் பூச்சி கட்சியில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் அக்கட்சியில் இணைந்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

முடக்கம் செய்யப்பட்ட பின்பும் மீண்டெழுந்த கரப்பான் பூச்சி மதச்சார்பின்மை, சோசலிசம், ஜனநாயகம், சோம்பேறி ஆகியவற்றை கொள்கையாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தக் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் எக்ஸ் பக்கம் நேற்று (21.5.2026) முடக்கப்பட்டது. யார் முடக்கக் கோரிக்கை வைத்தனர் என்பது தொடர்பாக எந்தத் தகவலும் இல்லை. எனினும் ‘கரப்பான் பூச்சி திரும்பிவிட்டது (Cockroach is back)’ என்ற புதிய பக்கத்தைத் தொடங்கி யுள்ளார், அக்கட்சியின் நிறுவனத் தலைவர் அபிஜித் தீப்கே. முடக்கத்திற்குப் பின் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் பாலோயர்ஸ் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் எகிறி வருகிறது. ஜென் ஸி, இளைஞர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அரசியல் தலை வர்களும் இந்தப் பக்கத்தைப் பின்தொடர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *