ஏர் இந்தியா விமானத்தில் பெரும் விபத்து தவிர்ப்பு நல்வாய்ப்பாக 181 பயணிகள் உயிர் தப்பினர் விமானிகள் பணியிடை நீக்கம்

பெங்களூரு, மே 22 கருநாடக மாநிலம் பெங்களூருவில் கெம்பேக வுடா பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. 2 முனையத்துடன் செயல்பட்டு வரும் இந்த விமான நிலையத்திற்கு இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் விமானங்கள் வந்து செல்கின்றன. இந்தநிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தை சேர்ந்த ஏ321 வகை விமானம் நேற்று காலை டில்லியில் இருந்து 181 பயணிகளுடன் பெங்களூரு புறப்பட்டது.

181 பயணிகள்

இந்த விமானம் சுமார் 3 மணி நேர பயணத்துக்கு பிறகு பெங்களூரு பன்னாட்டு விமான நிலையத்தில் தரை இறக்க விமானி முயற்சி செய்தார். தரை இறங்கும்போது அந்த விமானத்தின் வால்பகுதி தரையில் மோதி அதிக சத்தத்தை எழுப்பியது. உடனே சுதாரித்துக் கொண்ட விமானி சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை மேலே இயக்கினார். வானில் ஒரு முறை வட்டமடித்த பிறகு அந்த விமானத்தை மீண்டும் பத்திரமாக விமான நிலையத்தில் விமானி தரை இறக்கினார்.

விபத்து காரணமாக அந்த விமானத்தின் வால்பகுதி சேதம் அடைந்தது. விமானம் தரை இறக்கப்பட்டதும் 181 பயணிகள் மற்றும் விமான பணிப்பெண்கள் என அனைவரும் பாதுகாப்பாக விமானத் தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

ஏர் இந்தியா விமானம் தரையி றங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அதே ஓடுபாதையில் ஒரு சரக்கு விமானம் புறப்பட்டுள்ளது. இதன் காரணமாக வளிமண்டலத்தில் காற்றின் அதிவேகத்தால் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கிய போது தனது சமநிலையை இழந்ததால், விமானி விமானத்தை மேல்நோக்கி இயக்க முயன்றுள்ளார். அப்போது விமானத்தின் வால்பகுதி ஓடுதளத்தில் மோதியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

விபத்துக்குள்ளான விமானம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பெங்களூருவில் இருந்து மீண்டும் டில்லி செல்ல இருந்த அந்த விமானத்தின் சேவை ரத்து செய்யப்பட்டது. மாற்று விமானத்தில் பயணிகள் பெங்களூருவில் இருந்து டில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விமானிகள் பணியிடை நீக்கம்

இந்நிலையில் ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக விசாரணை நடத்த சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இந்த விபத்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடைபெற்றதா? அல்லது விமானியின் தவறால் இது நடந்ததா? என்பதை கண்டறிய விசாரணை நடத்தப்படும் என்றும், விசாரணை முடிவடையும் வரை 2 விமானிகள் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *