“தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல” பெங்களூரு கருத்தரங்கில் ரூத் மனோரமா பேச்சு

பெங்களூரு, மே 19  “தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்கள் மூங்கிலை போல மென்மையாக வளைந்து கொடுத்தாலும் அவர்கள் பலவீனமானவர்கள் இல்லை,” என பெங்களூருவில் நடைபெற்ற தேசிய தாழ்த்தப்பட்ட மகளிர் கருத்தரங்கில் மனித உரிமை செயற்பாட்டாளர் ரூத் மனோரமா தெரிவித்தார்.

தேசிய தாழ்த்தப்பட்ட மகளிர் கூட்டமைப்பின் சார்பில் ‘தாழ்த்தப்பட்ட பெண்ணிய சகோதரத்துவ கருத்தரங்கம்’ பெங்களூருவில் மே 14-ஆம் தேதி தொடங்கியது. மே 19-ஆம் தேதிவரை நடைபெறும் இந்த கருத்தரங்கில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ரூத் மனோரமா, ஜோதி ராஜ், பிரியங்கா சாமி மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட பெண்ணிய செயற்பாட்டாளர்கள் பங்கேற்றனர்.

இதில் ரூத் மனோரமா பேசு கையில், “கடந்த 50 ஆண்டு களாக அரும்பாடுபட்டு தேசிய அளவில் தாழ்த்தப்பட்ட பெண்கள் கூட்டமைப்பை நடத்தி வருகிறோம். சமூகத்தின் பின்தங்கிய வகுப்பினருக்கான அமைப்பை கட்டமைப்பதிலும், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக போராடுவதிலும் இந்த அமைப்பு மிகுந்த சவால்களுக்கு மத்தியில் உறுதியாக செயல்பட்டு வருகிறது.

தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்கள் ஆணாதிக்கம், ஜாதி கொடுமை, வன்முறை, புறக்கணிப்பு என பல தளங்களிலும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இந்த பெண்களை ஒருங்கிணைத்து தலைமைத்துவ பயிற்சிகளை கொடுத்து பாபாசாகேப் அம்பேத் கரின் வழியில் பயணிக்கச் செய் கிறோம். அவரது கூற்றின்படி கல்வியை புகட்டி, போராட்டம் நடத்தி, அனைவரையும் ஒன்றி ணைத்து வலுவான சக்தியாக மாற்றி வருகிறோம்.

தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்கள் ஒருபோதும் பலவீனமானவர்கள் இல்லை. அவர்கள் மிகவும் வலிமையானவர்கள். மூங்கில் போன்று வளைந்து கொடுத் தாலும், ஒருபோதும் முறிந்துவிட மாட்டார்கள். எனவே தாழ்த்தப்பட்ட பெண்களை அமைப்புகளாக உருவாக்கி, புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு சமூக மாற்றத்துக்கு உழைக்க அழைப்பு விடுக்கிறேன்,” எனத் தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *