வாகனங்களில் மாடுகளைக் கொண்டு செல்ல பிறப்புச் சான்றிதழ் கட்டாயமாம்! மேற்கு வங்க பா.ஜ.க. அரசின் அறிவிப்பால் பதற்றம்!!

கொல்கத்தா, மே 19 மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்து ஒரு மாதம் கூட ஆகாத சூழலில், அதன் அறிவிப்புகளால் ஒட்டு மொத்த மாநிலமே பதற்றமாகக் காணப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் பாஜக பதவியேற்று 10 நாட்களே ஆகியுள்ளது. கடந்த வாரம் விலங்குகளை அறுக்க புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே இறைச்சி விற்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதற்கு மேற்கு வங்க மக்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்தனர்.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் வாகனங்களில் பசு மாடு கள் கொண்டு செல்லப்படுவதை பரி சோதனை செய்யும் போது, பசுக்களின் “பிறப்புச் சான்றிதழ்கள்” கேட்கப்படும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் ரேகா பாத் ரா அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “கால் நடை ஒழுங்கு முறைச் சட்டங்கள் மூலம் புதிய வழிகாட்டுதல்களின் படி, 14 வயதுக்குட்பட்ட பசு மாடுகளை அறுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என மிரட்டல் விடுத்துள்ளார்.

நாட்டில் மனிதனுக்கே பிறப்புச் சான்றிதழ்கள் வாங்குவது கடினமான சூழலில், பாஜக ஆளும் மேற்கு வங்கத் தில் பசு மாடுகளுக்கு பிறப்புச் சான்றிதழ் கேட்கும் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக கொல்கத்தா, அவுரா உள்ளிட்ட முஸ்லிம் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *