சென்னை, மே 17 திருநங்கைகள் விழிகள் அமைப்பின் செய லாளர் துர்காசிறீ கூறுகையில், “மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் திருநங்கைகளுக்கு ரூ.1,000 கிடைத்தது. மேலும் பலர் விண்ணப் பித்துள்ளனர். ஆட்சி மாற்றத்தால் அந்த விண்ணப்பங்கள் இன்னும் பரிசளிக்கப்படாமல் உள்ளன. விரைவில் பரிசீலனை செய்து திருநங்கைகளுக் கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க அரசாணை பிறப்பிக்க வேண்டும். மேலும், மகளிர் இலவச பேருந்து சலுகையை திரு நங்கைகளுக்கும் விரிவாக்க வேண்டும். 2019-இல் சென்னை கண்ணகி நகரில் ஒதுக்கப்பட்ட வீடுகளில் குடியிருக்க இயலாத சூழல் உள்ளதால் வேறு இடங்களில் குடியிருப்பு வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் 22,634 திருநங்கைகள் இருப்பதாகவும், தென் சென்னையில் மட்டும் 1,954 பேர் இருப்பதாகவும், இவர்களில் 40 சதவீதம் பேர் பட்டதாரிகள் என்பதால் அரசு மருத்துவமனை மற்றும் மாநகராட்சி போன்ற இடங்களில் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
