டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஜூலை 1 முதல் சிபிஎஸ்இ பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் மும்மொழி பயில்வது கட்டாயம்: 3ஆவது மொழி பாடத்திற்கு 10ஆம் வகுப்பில் அரசு தேர்வு கிடையாது. சிபிஎஸ்இ சுற்றறிக்கை.
* நீட் வினாத்தாள் கசிவு; மன உளைச்சலில் இதுவரை நான்கு மாணவர்கள் தற்கொலை.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஒன்றிய இணை அமைச்சரின் மகன் போக்சோ வழக்கில் கைது. சிறுமிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகாரில், ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பண்டி சாய் பகீரத் சனிக்கிழமை மாலை தெலங்கானா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல். “பாஜக-RSS கூட்டணி”யும் இந்தியாவின் கல்வி அமைப்பையும், இந்தியாவின் அடிப்படைத் தன்மையையும் சீர்குலைத்து விட்டதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
* பிராந்தியப் போட்டிக்கு மத்தியில், பிரம்மாண்டமான பாதுகாப்புத் துறை விமான சோதனை மய்யத்தை ஆந்திராவிடம் இழந்தது தமிழ்நாடு. இத்திட்டத்தை ஓசூரில் அமைப்பதற்காக, கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு DRDO-வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
தி இந்து:
* மணிப்பூர் போராட்டம் தொடர்கிறது; குக்கி பழங்குடியினரின் உச்ச அமைப்பால் அறிவிக்கப்பட்ட 48 மணி நேர முழு அடைப்பு மற்றும் போராட்டங் களால் மாநிலம் முடங்கியது.குடியரசுத் தலைவர் ஆட்சியை மீண்டும் அமல்படுத்த குக்கிகள் கோரிக்கை.
* பதவியேற்று ஒரு வாரத்திற்கு பின் அமைச்சர்களுக்கு துறைகள்ஒதுக்கீடு: விஜய், புஸ்ஸி ஆனந்த், ஆதவ், நிர்மல் குமாருக்கு முக்கியத் துறைகள்: நிதி அமைச்சரானார் செங்கோட்டையன்.
தி டெலிகிராப்:
* நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சை: 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை குறித்த விவாதம் மீண்டும் சூடு பிடித்தது. பயிற்சி மய்யங்களை சார்ந்திருப்பதில் உள்ள பாரபட்சம், தொடர் முறைகேடு குற்றச்சாட்டுகள் மற்றும் ஏழை மாணவர்களுக்கு கிடைக்கும் சமமற்ற வாய்ப்புகள் ஆகியவற்றைக் காரணம் காட்டி, கலப்புச் சேர்க்கை முறையை அமல்படுத்த கல்வியாளர்கள் கோரிக்கை.
– குடந்தை கருணா
