பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வு திரும்பப் பெற பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!

சென்னை, மே 17 தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில்:

பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் சமையல் எரிவாயு உருளைகளின் விலை உயர்வு தமிழ்நாடு மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.இந்த திடீர் விலை உயர்வு, தற்போதைய சூழலில் மீண்டும் ஒரு லாக்டவுன் போன்ற அவசர நிலை உருவாகிவிடுமோ என்ற அச்சத்தை பொதுமக்கள் மத்தியில் விதைத்துள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

விலை உயர்வைத் திரும்பப் பெறுக: பொதுமக்களைப் பாதிக்கும் பெட் ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் எரிவாயு உருளைகளின் விலை உயர்வை தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் உடனடி யாகத் தலையிட்டு திரும்பப் பெற வேண் டும். தட்டுப்பாட்டைச் சரிசெய்க: எரிபொருட்களுக்கு தற்போது நிலவி வரும் தட்டுப்பாட்டைப் போக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாழ்வாதாரத்தைப் பாதுகாக்குக: மக்களின் அன்றாடத் தேவைகள் பாதிக்காத வண்ணமும், அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையிலுமான தீர்வுகளை அரசுகள் விரைந்து செயல்படுத்த வேண்டும்.பொருளாதார சுமையைக் குறைக்க: பொதுமக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த கடுமையான பொருளாதாரச் சுமையை நிரந்தரமாகக் குறைப்பதற்கு இரு அரசுகளும் உறுதியான, தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த விலை உயர்வை ரத்து செய்ய அரசு முன்வர வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *