கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 16.5.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* நீட் ஒரு மோசடி; முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும், கனிமொழி கருணாநிதி ஆவேசம்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* நீட் வினாத்தாள் கசிவின் மூளையாக செயல்பட்ட புனே பேராசிரியர் அதிரடி கைது: பயிற்சி வகுப்புகளில் கேள்வித்தாளை வெளியிட்டது அம்பலம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மேற்கு வங்கத்தில் உள்ள பாஜக அரசு, மாநிலத்தில் பி.எம்.சிறீ. பள்ளிகள் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், நேற்று (15.5.2026) ஒன்றிய அரசுடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. மேற்கு வங்கம் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில், தமிழ்நாடும், கேரளமும் மட்டுமே இதுவரை இதில் கையெழுத்திடாத மாநிலங்களாக எஞ்சியுள்ளன.

தி இந்து:

* தேர்தல் முடியும் வரை காத்திருந்து இடியை இறக்கியது ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலை ரூ.3 உயர்வு: மக்கள் கடும் அதிர்ச்சி

தி டெலிகிராப்:

* டில்லி பேருந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம் ‘நிர்பயா’ நினைவுகளைத் தூண்டுகிறது; வடமேற்கு டில்லியின் நங்லோய் பகுதியில், 12.5.2026 அன்று இரவு ஓடிக்கொண்டிருந்த ஒரு படுக்கை வசதி கொண்ட பேருந்திற்குள், 30 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது; பெண்களின் பாதுகாப்புக்கு மிகவும் பாதுகாப்பற்ற பெருநகரமாக இந்தியாவில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ள தேசியத் தலைநகரில், பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளை இச்சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *