டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மாணவர்கள் பள்ளிச் சீருடைகளுடன் பள்ளி, கல்லூரிகளில் காவித் துண்டு அணிய தடை; ஹிஜாப் சிவதாரா, ருத்ராட்சம் ஆகியவற்றை அணியலாம்: கருநாடக அரசு உத்தரவு.
* நீட் வினாத்தாள் கசிவு: தேசிய தேர்வு முகமையை முற்றிலுமாக சீரமைக்க வேண்டும், மருத்துவ அமைப்புகள் கோரிக்கை. உச்ச நீதிமன்றத்தில் மனு.
* மாணவர்களின் நம்பிக்கையை சிதைத்துள்ளது நீட் வினாத்தாள் கசிவு. நேர்மையான விசாரணை வேண்டும், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் வேண்டுகோள்.
* பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பின் கேரள முதலமைச்சராக வி.டி.சதீசன் தேர்வு: 18ஆம் தேதி பதவியேற்கிறார்.
* தேர்தல் ஆணையர்கள் தேர்வுக்குழுவில் ஒன்றிய அமைச்சர் ஏன் இடம் பெற வேண்டும்? உச்ச நீதிமன்றம் கேள்வி
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* அதானி மீதான குற்றச்சாட்டுகளை ‘அமெரிக்கா கைவிட அமெரிக்கா முடிவு: பிரதமர் வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஏன் ஒப்புக் கொண்டார், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை ஏன் நிறுத்தினார் என்பது இப்போது தெளிவாகிறது என காங்கிரஸ் குற்றச்சாட்டு.
* நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட புனேவைச் சேர்ந்த ஒரு அழகு நிலையத்தின் உரிமையாளர் மனிஷா வாக்மரே என்பவர், தேர்வுக்கு முன்னதாக 21 வங்கிக் கணக்குகளில் இருந்து நிதியை பெற்றதாக சிபிஅய் கண்டுபிடிப்பு., இடைத்தரகராகச் செயல்பட்டு, தேர்வு எழுதுவோரை ஒரு மருத்துவ ஆலோசகருடன் இணைத்ததாக விசாரணை வெளிப்படுத்துகிறது. அந்த மருத்துவ ஆலோசகர், மாநிலங்களுக்கு இடையிலான ஒரு பரந்த வலைப்பின்னல் மூலம் கசிந்த நீட் வினாத்தாள்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
தி இந்து:
* இப்படி மாத்தி மாத்தி, குற்றம் சொல்லிகிட்டே இருந்தா, இதுக்கு ஒரு முடிவே இருக்காது தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்; அமைப்பு முறையில் மிகப்பெரிய மாற்றம் கொண்டு வரப்படும்: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு.
தி டெலிகிராப்:
* 2024-ஆம் ஆண்டில் 1,500-க்கும் மேற்பட்ட நீட் தேர்வர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க பின்பற்றப்பட்ட நடைமுறையை வெளியிட வேண்டும் என்று ஒன்றிய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை, தேசிய தேர்வு முகமை மீறியதாகக் கூறப்படுகிறது; உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியும் தகவல் தரப்படவில்லை. இது அதன் செயல்பாடுகளின் வெளிப்படைத்தன்மை குறித்துப் புதிய கவலைகளை எழுப்பியுள்ளது.
– குடந்தை கருணா
