விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனைச் சந்தித்த முதலமைச்சர் விஜய்

சென்னை, மே 13 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. தமிழ்நாடு முதல மைச்ச ராக கடந்த 10 ஆம் தேதி விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதனிடையே, முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின் விஜய் அரசியல் நாகரீகத்தின் வெளிப்பாடாக, மரியாதை நிமித்தமாக பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். அதன்படி, திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை சந்தித்தார். இதையடுத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.சண்முகம் மற்றும் அவரது ஆதரவு அதிமுக சட்டமன்ற உறுப்பி னர்கள் ஆகியோரை முதலமைச்சர் விஜய்  சந்தித்தார்.

இந்நிலையில் முதலமைச்சர் விஜய், வேளச்சேரியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வீட்டிற்குச் சென்று அவரை  சந்தித்தார்.

முதலமைச்சர் விஜய்யை, வாசலுக்கு சென்று வரவேற்ற திருமாவளவன், பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார். பின்னர், அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புப் பக்கத்தை, முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் வழங்கி னார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *