இலங்கைப் பயணிகள் கப்பல் மீண்டும் இயக்கம்

1 Min Read

நாகப்பட்டினம், மே 13- நாகப்பட்டினம் துறைமுகம், இலங்கை காங்கேசேன் துறை இடையே இன்ஜின் பழுது காரணமாக நிறுத்தப்பட்ட பயணிகள் கப்பல் இன்று (13ஆம் தேதி) முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது.
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறை இடையில் தனியார் கப்பல் நிறுவனத்தின் சார்பில் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இயங்கி வருகிறது.
மூன்று மணி நேரத்திற்கும் மேலான கடல் பயணம் என்பதால் இந்திய இலங்கை சுற்றுலா பயணிகள் இந்த கப்பலை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி மதியம் 2 மணிக்கு இலங்கை காங்கேசன் துறையில் இருந்து 142 பயணிகளுடன் நாகப்பட்டினம் வந்த கப்பல் கல்லார் கிழக்கே 2 நாட்டிக்கல் மைல் தொலைவில் நடுக்கடலில் இன்ஜின் பழுதடைந்து நடுக்கடலில் நிறுத்தப்பட்டது.
இதை தொடர்ந்து இன்ஜின் பழுது செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதன் பின்னர் நாளை (13ம் தேதி) முதல் வழக்கம் போல் பயணிகள் கப்பல் இயக்கப்படவுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *