கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 13.5.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* ஸநாதனத்தை ஒழிப்போம்; தமிழ்மொழி வாழ்த்துக்கே முன்னுரிமை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சட்டபேரவையில் பேச்சு.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* பெட்ரோல், கேஸ் தட்டுப்பாடு காரணமாக வீட்டில் இருந்து வேலை பார்ப்பீர், பிரதமர் மோடியின் வேண்டுகோளை புறக்கணிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள். உடனடியாக எதுவும் செய்ய இயலாது என கருத்து.

* வினாத்தாள் கசிவு; நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு ரத்து: சிபிஅய் விசாரிக்க ஒன்றிய அரசு உத்தரவு; மறுதேர்வு நடத்துவதாக என்டிஏ அறிவிப்பு

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* “எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் வெறும் ரப்பர் முத்திரை அல்ல”, “பாரபட்சமான நடைமுறையில் பங்கேற்க மாட்டேன்”: அடுத்த சிபிஅய் இயக்குநரை தேர்ந்தெடுப்பதில் ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு கடிதம்.

* முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது தனிப்பட்ட ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் தமிழ்நாடு அரசின் முதலமைச்சருக்கான சிறப்புப் பணி அதிகாரியாக (OSD) நியமித்தார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பிரதமர் மோடியின் பேச்சு பொறாமையும் பொய்களும் நிறைந்தது; அது வகிக்கும் பதவியின் கண்ணியத்தையே சிதைக்கிறது. கருநாடக காங்கிரஸ் கட்சி உட்கட்சிப் பூசல்களால் உழன்று வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறிய மறுநாளே, கடந்தகாலப் பிரதமர்கள் எவரும் தெருவோரப் பேச்சுக்களின் தரத்திற்குத் தாழ்ந்தோ, அற்ப அரசியல்வாதிகளைப் போல எதிர்க்கட்சிகளை இழிவாகப் பேசியோ நடந்துகொண்டதில்லை என்று முதலமைச்சர் சித்தராமையா பதிலடி.

தி இந்து:

* கேரளாவில் முதலமைச்சர் தேர்வு செய்வதில் தொடரும் சிக்கல். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட கட்சியின் உயர்மட்ட தலைவர்கள், மாநிலத்தின் மூத்த தலைவர்கள் மற்றும் கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் (KPCC) முன்னாள் தலைவர்களுடன் புதுடில்லியில் கலந்தாய்வுகளை தொடங்கினர்.

* “பாஜகவின் ஊழல் ஆட்சியில் நசுக்கப்படும் மாணவர்களின் உழைப்பு” – நீட் தேர்வு ரத்துக்கு ராகுல் கண்டனம்.

தி டெலிகிராப்:

* ‘இந்திய இளைஞர்களின் கனவுகளுக்கு மோடி அரசே மிகப்பெரிய அச்சுறுத்தல்’:  நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கொந்தளிப்பு. கடந்த 10 ஆண்டுகளில் 89 முறை வினாத்தாள்கள் கசிந்ததாகவும், 48 முறை மறு தேர்வுகள் நடத்தப்பட்டதாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

* மேற்கு வங்கத்தில் புதிதாக பதவி ஏற்றுள்ள பாஜக அரசில் இரண்டு தேர்தல் அதிகாரிகள் உயர் பதவிகளை பெற்றதைத் தொடர்ந்து, பாஜக மீது ‘வெட்கமற்ற கூட்டுச் சதி’ என்ற கடும் விமர்சனம். ‘பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தின் ‘திருடர்கள் சந்தையில்’, திருட்டு எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ, அதற்கான வெகுமதியும் அவ்வளவு பெரிதாக இருக்கும்’ என ராகுல் கடும் தாக்கு.

* நீட் தேர்வில் முறைகேடு என்பது அல்ல; நீட் தேர்வே முறைகேடு தான், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* முதலமைச்சர் விஜய்யின் ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேலுக்கு அரசு பதவி: காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கண்டனம். மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *