1000-2000 ஆண்டுகளாக நாம் மனிதர்கள் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியுள்ளவர்களாக இருந்தோமா? கடவுள், மதம், சாத்திரம் ஆகியவற்றால் காட்டுமிராண்டிகளாகவும், மடையர்களாகவும் ஆக்கப்பட்டு, மோசமான நிலையிலேயே இருந்து வந்தோமா – இல்லையா? கடந்த 30, 35 ஆண்டுக் காலமாகச் சுயமரியாதை இயக்கத்தின் காரணமாகத்தானே நம் மக்களிடத்தில் விழிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் முன்னேற நம் தொண்டு எவ்வளவு தேவையென்பது தெரியவில்லையா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
