சிதம்பரம், மே 13- சிதம்பரம் கழக மாவட்டம் புவனகிரி-பெருமாத்தூர் எஸ் பழனி யாண்டி (வயது 93) 7.5.2026 அன்று மறைவுற்றதை தொடர்ந்து அவரின் விழிகள் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் அவரின் உடல் கடலூர் மாவட்ட அரசு பொது மருத்துவ மனை மருத்துவக் கல்லூ ரிக்கும் கொடையாக வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை சிதம்பரம் பொது நலத் தொண்டர் ராமச்சந்திரன் செய்து உதவினார். மறைந்த பெரியார் பெருந்தொண்டரின் பெருமை குறித்து அருமை குறித்து தமிழர் தலைவர் அளித்திருந்த இரங்கல் செய்தி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.மறைந்த பெரியார் பெருந்தொண்டரின் உடலுக்கு கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன், மாவட்ட கழக செயலாளர் கோவி. பெரியார் தாசன், மாவட்ட துணைச் செயலாளர் ஆண்டிபாளையம் முருகன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் நெடுமாறன், செயலாளர் செங்குட்டுவன், மாவட்ட இளைஞரணி தலைவர் சிற்பி சிலம்பரசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பஞ்சநாதன், ஒன்றிய கழகத் தலைவர் பெரியண்ணசாமி, செயலாளர் ராஜசேகர், வலசக்காடு கழகத் தலைவர் வீரமணி, புவனகிரி ஒன்றிய தலைவர் என் ஏ ராமலிங்கம், சிதம்பரம் நகர அமைப்பாளர் செல்வ ரத்தினம், சிதம்பரம் பெரியார் படிப்பகம் துணைத் தலைவர் ஆறு.கலைச்செல்வன், பெரியார் பெருந்தொண்டர் ஆசிர்வாதம், வடலூர் நகரத் தலைவர் புலவர் ராவணன், நகர அமைப்பாளர் முருகன் ஆகியோர் மாலையிட்டு வீரவணக்கம் தெரிவித்தனர். உடல் கொடை அளிப்பதற்கு முன்பு இரங்கல் தெரிவித்து சுயமரியாதைச் சுடரொளியின் போர் குணம் தொண்டறம் பற்றி எடுத்துரைக் கப்பட்டது. அவரின் மகன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு கழகத்தின் சார்பில் ஆறுதல் தெரிவிக்கப்பட்டது.
பெரியார் பெருந்தொண்டர் மறைந்த பெருமாத்தூர் எஸ்.பழனியாண்டியின் விழி மற்றும் உடற்கொடை!
Leave a Comment
