ரயில்வேயில் அசிஸ்டண்ட் லோகோ பைலட் பணி

ஒன்றிய ரயில்வேயில் காலியாக உள்ள 11,127 அசிஸ்டண்ட் லோகோ பைலட் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து மே 15 முதல் ஜூன் 14-க்குள் இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது பற்றிய விபரம் வருமாறு:

பணி்: Assistant Loco Pilot (ALP)

காலியிடங்கள்: 11,127 (விரைவில் ரயில்வே மண்டலங்கள் வாரியாக காலியிடப்பகிர்வு ரயில்வே இணையதளத்தில் வெளியிடப்படும்).

ஊதியம்: மாதம் ரூ.19,900

வயதுவரம்பு: 1.7.2026 தேதியின்படி பொதுப் பிரிவினர்கள் 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி, ஒபிசி பிரிவினர்களுக்கு ரயில்வே விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்.

தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று பிட்டர், எலெட்ரிசியன், இன்ஸ்ருமெண்ட் மெகானிக், மில் ரைட், மெயிண்டனன்ஸ் மெகானிக், எலட்ரானிக்ஸ், ரேடியோ & டி.வி. மெகானிக், வொயர்மேன், டர்னர், மெகானிஸ்ட், ரெபிரிஜெரேசன் & ஏர் கண்டிஷனிங்  போன்ற ஏதாவதொரு டிரேடில் அய்டிஅய் முடித்து அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது மெகானிகல், எலெட்ரிகல், எலட்ரானிக்ஸ், ஆட்டோமொகைல் போன்ற பொறியியல் பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் டிப்ளமோ அல்லது பி.இ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் கணினி வழித் தேர்வு எனப்படும் இணைய வழி எழுத்துத்தேர்வு, மருத்துவத் தகுதித்தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வில் கேள்விகள் 10ஆம் வகுப்பு தரத்தில் கேட்கப்படும். எழுத்துத் தேர்வுக்கான விரிவான பாடத்திட்டம், மதிப்பெண்கள் விவரம் ஆகியவை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. கேள்விகள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் கேட்கப்படும். இதில் ஏதாவதொரு மொழியை தேர்வு செய்து தேர்வை எழுதலாம். எழுத்துத்தேர்வு பற்றிய விபரம் இ-நுழைவுச்சீட்டு மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும். எழுத்துத்தேர்வில் கலந்து கொள்ளும் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கைகளுக்கு ரூ.250. இதர பிரிவினர்களுக்கு ரூ.500. கட்டணத்தை இணைய வழி முறையில் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.rrbchennai.gov.in என்ற இணையதளம் மூலம் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.5.2026 முதல் 14.6.2026 வரை இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *