சென்னை, மே 11– இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன், திமுக கூட்டணியிலேயே தொடர்வதாக அறிவித்துள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் வெளியிட்ட அறிக்கையில், தமிழ் நாட்டில் ஆளுநர் ஆட்சி என்பது வரவேற்புக்கு உரியது அல்ல என்பதையும் ஜனநாயக அரசு உருவாக்குவதை தவிர்த்தால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு விடும் என்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உயர்மட்டக் குழு கருதுவதாக கூறியுள்ளார். தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பேணிக் காப்பதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் த.வெ.கா.வுக்கு ஆதரவு என்ற முடிவு எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசியலில் நீண்ட காலமாக தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இருந்து வரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அதே நிலையில் தொடரும் என்றும் தமிழ்நாட்டில் ஜனநாயக முறையிலான ஆட்சி உருவாவதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில உயர்மட்டக்குழு தீர்மானத்தை நிறைவேற்றி இருப்பதாக மொகிதீன் தெரிவித்துள்ளார்.
