5 மாநில சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை ரூ.5 உயருகிறது எண்ணெய் நிறுவனங்கள் கூட்டமைப்பு முடிவு

சேலம், மே 10- அய்ந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையை ரூ.5 வரை உயர்த்த எண்ணெய் நிறுவனங்களின் கூட்ட மைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க கூட்டுப்படைகள் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலையும் பீப்பாய் 65 டாலரில் இருந்து 100 டாலருக்கு மேல் சென்றுவிட்டது. இதனால், இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நட்டத்தை ஈடுகட்ட பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட அனைத்து எரிபொருட்களின் விலையையும் உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.

ஆனால், தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்குவங்கம், கேரளா, அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்ததால், பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட எரி பொருட்களின் விலையை உயர்த்தாமல் ஒன்றிய பாஜ அரசு பார்த்துக்கொண்டது. தற்போது தேர்தல் முடிந்து, அனைத்து நடை முறைகளும் திரும்ப பெறப்பட்டுள்ள நிலையில், எரிபொருட்கள் விலை உயர்வை மேற்கொள்ள எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

கடந்த மே 1ஆம் தேதி, 19 கிலோ வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.998 உயர்த்தினர். இதன்மூலம் நாடு முழுவதும் வர்த் தக சிலிண்டர் சுமார் ரூ.3 ஆயிரத்திற்கு விற்கப்படு கிறது. அன்றைய தினத் தில், 5 கிலோ சிறிய சிலிண்டர் மற்றும் விமான எரிபொருளான ஒயிட் பெட்ரோல், தொழிற் சாலைகளுக்கான டீசல் ஆகியவற்றின் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலையை மட்டும் உயர்த்தாமல் நிலையாக வைத்துக் கொண்டனர்.

இந்நிலையில் தற்போது, 5 மாநிலங்களிலும் தேர்தல் முடிந்து, புதிய அரசுகள் பொறுப்பேற்க இருக்கும் நிலையில், இதற்கு மேல் தங்களால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரி பொருட்களின் விலையை உயர்த்தாமல் இருக்க முடியாது என ஒன்றிய அரசுக்கு எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாதத்திற்கு ரூ.30 ஆயிரம் கோடி நட்டத்தை சந்தித்து வருவதால், வரும் 15ஆம் தேதிக்குள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

எண்ணெய் நிறு வனங்கள் சந்தித்துள்ள நட்டத்தை ஈடுகட்ட பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை லிட்டருக்கு ரூ.4 முதல் ரூ.5 வரை உயர்த்தப்படும் என தகவல்கள் வெளி யாகியுள்ளது. அதுவும் வரும் 15ஆம் தேதி இவ்விலையேற்றம் நடை முறைக்கு வர வாய்ப்புள்ளது எனக்கூறப்படுகிறது. அதே போல், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையை ரூ.50 முதல் ரூ.100 வரை உயர்த்தவும் திட்டம் வைத்துள்ளனர்.

அதற்கு ஒன்றிய அரசிடம் இருந்து தற்சமயம் ஒப்புதல் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக கூறப் படுவதால், முதலில் பெட் ரோல், டீசல் விலையை உயர்த்திவிட்டு, பிறகு எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தலாம் என்ற முடிவுக்கு எண் ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு வந்துள்ளது எனத்தகவல்கள் வெளியாகி யுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *