டிரம்ப் விதித்த 10 சதவீத இறக்குமதி வரி செல்லாது! அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பு

வாசிங்டன், மே 9- உலக நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிபர் டிரம்ப் விதித்த 10 சதவீத கூடுதல் வரி செல்லாது என்று அமெரிக்க பன்னாட்டு வர்த்தக நீதி மன்றம் தீர்ப்பளித் துள்ளது.

அதிபர் டிரம்ப் நிர்வாகம் கடந்த பிப்ரவரி மாதம் பெரும்பாலான இறக்குமதிப் பொருட்களுக்கு 10 சதவீத வரியை விதித்தது. இதை எதிர்த்து 24 மாகாணங்களும், சில தனியார் நிறுவனங்களும் கடந்த மார்ச் மாதம் வழக்குத் தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, 2-1 என்ற கணக்கில் டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கை சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்தது.

இது தொடர்பாக 53 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளதாவது: 1974-ம் ஆண்டின் வர்த்தகச் சட்டத்தின் 122ஆவது பிரிவைப் பயன்படுத்தி இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வர்த்தகக் கொடுப்பனவு நிலையில் (பேலன்ஸ் ஆப் பேமண்ட்) பெரும் பற்றாக்குறை நிலவும் போது மட்டுமே, 150 நாட்களுக்கு இத்தகைய வரியை விதிக்க அதிபருக்கு அதிகாரம் உண்டு. ஆனால், டிரம்ப் நிர்வாகம் வர்த்தகப் பற்றாக்குறையை மட்டுமே காரணமாகக் காட்டி இந்த வரி விதிப்பை செயல்படுத்தியுள்ளது.

இது சட்டப்படி செல்லாது. இந்த வரி விதிப்பால் மனுதாரர்களுக்குப் பொருளாதார ரீதியாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, வழக்கு தொடர்ந்த மாகாணம் மற்றும் இரு நிறுவனங்களிடம் வசூலிக்கப்பட்ட வரியை வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர்.

டிரம்ப் விமர்சனம்

இதுகுறித்து அதிபர் டிரம்ப் கூறும்போது, ‘‘நீதிமன்றங்களின் இத்தகைய தீர்ப்புகள் எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள். ஒரு வழியில் தடை ஏற்பட்டால், நாங்கள் மாற்று வழியில் வரி விதிப்பு முறையைச் செயல்படுத்துவோம்’’ என்றார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *