“பிஎம்சிறீ திட்டத்தை ஏற்கக் கூடாது” இருமொழி கொள்கையே உறுதியானது! அன்பில் மகேஸ் திட்டவட்டம்

1 Min Read

திருச்சி, மே 9– தமிழ்நாட்டில் பிஎம்சிறீ திட்டத்தை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது என்றும், மாநிலத்தின் இருமொழி கொள்கையில் அரசு உறுதியாக இருப்பதாகவும் மேனாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 தேர்ச்சி: மாணவர்களுக்குப் பாராட்டு

திருச்சியில் நேற்று (8.5.2026) செய்தியாளர் களைச் சந்தித்த அவர், அண்மையில் வெளியான பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் குறித்துப் பேசினார். அதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

தேர்ச்சி விகிதம் உயர்வு

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 0.1 சதவீதம் அதிகரித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

திருச்சி மாவட்ட சாதனை

ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதத்தில் திருச்சி மாவட்டம் 5ஆவது இடத்தையும், அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளது பெருமைக் குரியது.

தேர்வில் வெற்றி பெறாத மாணவர்கள் குறித்துப் பேசிய அவர், “பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மட்டுமே வாழ்க்கை கிடையாது. தேர்ச்சி பெறாத மாணவர்கள் மனச்சோர்வு அடையா மல், உடனடியாக நடை பெறவுள்ள துணைத் தேர்வுக்கு தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

ஒன்றிய அரசின் பிஎம்சிறீ திட்டம் குறித்து அமைச்சர் தனது நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்கினார்:

“பிஎம்சிறீ திட்டத்தை ஏன் எதிர்க்கிறோம் என்பதற்கான காரணங் களை ஏற்கனவே விளக்கிவிட்டோம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இரு மொழி கொள்கையே போதுமானது. ஆட்சியில் யார் இருந்தாலும் இந்தத் திட்டத்தை ஏற்கக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.”

மேலும், மாநிலத்தின் நலன் சார்ந்த இந்த முடிவுக்கு ஒட்டுமொத்த தமிழ்நாடும் துணையாக நிற்கும் என்றும், மொழி மற்றும் கல்வி உரிமை களுக்காக அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *