தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சென்னை, மே 8- தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக் கலாம்; தேர்வு முறை இதுதான்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (TANUVAS) கீழ் செயல்படும் ஈரோடு மாவட்டம் பர்கூரில் உள்ள கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 18.05.2026 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாகக் கலந்து கொள்ளலாம்.

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இரு சக்கர வாகன ஓட்டு நர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: இந்த பணியிடங் களுக்கு விண்ணப்பிக்க 01.05.2026 அன்று 21 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: இந்தப் பணியிடங் களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படை யில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாகக் கலந்துக் கொள்ளலாம். ரூ.20,000 ஊதியம் வழங்கப்படும்.

முகவரி: பர்கூர் கேட்டில் ஆய்வு மய்யம், பர்கூர், அந்தியூர் தாலுக்கா, ஈரோடு – 638 501, தமிழ்நாடு.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 18.05.2026.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *