திருச்சி, மே 8 திருச்சி முசிறி தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் என்பவர், கட்டுமானப் பணிகளுக்காகப் பெற்றுக்கொண்ட 80 லட்சம் ரூபாயை மோசடி செய்து விட்டதாக திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
திருச்சி கலைஞர் கருணாநிதி நகர் – ரங்கா நகரைச் சேர்ந்த லட்சுமி (41), ஒரு நிறுவனத்தில் மேலாண்மை நிர்வாக இயக்கு நராகப் பணியாற்றி வருகிறார். தனது நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதற்காக, அலுவலகக் கட்ட டத்தின் இரண்டாவது தளத்தைப் புதுப்பிக்கத் திட்டமிட்டுள்ளார்.
இதற்கான கட்டுமான ஒப்பந் தத்தை, லால்குடி ஆங்கரை பாலாஜி நகரைச் சேர்ந்த பொறியாளர் விக்னேஷ் மற்றும் அவரது மனைவி சிவரஞ்சனி ஆகியோரிடம் கடந்த 2025-ஆம் ஆண்டு வழங்கியுள்ளார்.
ஆனால் அவர்கள் பணிகளை முடிக் காமல் பாதியிலேயே நிறுத்திவிட்டனர். பணிகளை முடிக்காததால், வழங்கிய தொகையைத் திருப்பித் தருமாறு கேட்டபோது, அவர்கள் முறையாகப் பதில ளிக்காமல் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது விக்னேஷ் முசிறி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், அவரிடமிருந்து பணம் மீண்டும் கிடைக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
“சட்டமன்ற உறுப்பினர் என்ற பதவியைப் பயன்படுத்தி அவர் பணத்தைத் தராமல் ஏமாற்ற வாய்ப்புள்ளது. எனவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, எனது பணத்தைப் பெற்றுத் தர வேண்டும்,” என லட்சுமி தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினியிடம் அளிக்கப்பட்ட இந்தப் புகார் மனுவைத் தொடர்ந்து, அவரது உத்தரவின் பேரில் கலைஞர் கருணாநிதிநகர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தவெக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் மீது இத்தகைய மோசடி புகார் எழுந்துள்ளது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்ெகனவே சென்னையில் தவெக கட்சியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர் ஒருவர் சிறுமியை பாலியல்வன்கொடுமை செய்த குற்றத்திற்காக சிறையில் உள்ளார் நேற்று அவர் அன்று கைதான நிலையில் இன்று மற்றொருவர் திருச்சியில் சிக்கி உள்ளார்.
