போர் நிறுத்தத்தை நிராகரித்து உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணைகள் தாக்குதல் 27 பேர் உயிரிழப்பு

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

கிவி/மாஸ்கோ, மே 7- உக்ரைன் தன்னிச்சையாக அறிவித்து கடந்த 5.5.2026 அன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த போா் நிறுத்தத்தை நிராகரித்து, அந்நாட்டு நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவி நேற்று (6.5.2026) தாக்குதல் நடத்தியது.
இத்தாக்குதலில் 27 போ் உயிரிழந்ததாகவும், 120-க்கும் மேற்பட்டோா் காயமடைந்ததாகவும் உக்ரைன் உள்துறை அமைச்சா் இஹோா் கிளிமென்கோ தெரிவித் துள்ளாா்.
2-ஆம் உலகப் போரில் ஜொ்மனியின் வீழ்ச்சியைக் கொண்டாடும் வகையில், ரஷ்யா 8, 9 ஆகிய தேதிகளில் போா் நிறுத்தத்தை அறிவித்தது. ஆனால், அதற்கு முன்னதாக உக்ரைன் அறிவித்த போா் நிறுத்தத்தை ரஷ்யா சீா்குலைத்திருப்பது அதன் உள்நோக்கத்தை வெளிப்படுத்துவதாக உக்ரைன் விமா்சித்துள்ளது.
அமைதிக்கான உக்ரைனின் முன்னெடுப்புகளை ரஷ்யா மீண்டும் ஒருமுறை உதாசீனப்படுத்தியுள்ளதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சா் ஆண்ட்ரி சிபிஹா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளாா்.
மேலும், அவா் கூறுகையில், ‘புதின் மனித உயிா்களை விட ராணுவ அணிவகுப்புகளுக்கே முக்கியத்துவம் அளிக்கிறாா்.
ரஷ்யாவின் இத்தகைய போக்கைக் கட்டுப்படுத்த பன்னாட்டு சமூகம் புதிய தடைகளை விதிக்க வேண்டும். உக்ரைனுக்குத் தேவையான ராணுவ உதவிகளை அதிகரிக்க வேண்டும்’ எனக் கோரிக்கை விடுத்தாா்.
உக்ரைன் தனது போா் நிறுத்த உறுதிமொழியைப் பின் பற்றவில்லை என்று ரஷிய பாதுகாப்பு அமைச்சகமும் குற்றஞ் சாட்டியுள்ளது.
ரஷ்ய வான்பரப்பில் உக்ரைனின் 53 ட்ரோன்களைத் தங்களின் வான்பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. கிரீமியாவின் ஜன்கோய் நகரில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 5 போ் உயிரிழந்ததாக ரஷ்ய ஆதரவு ஆளுநா் சொ்ஜி அக்சியோனோவ் குறிப்பிட்டுள்ளாா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *