ஒரு ஓட்டு வித்தியாசத்தில் பெரியகருப்பன் தோல்வி! தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்படும் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

1 Min Read

சென்னை, மே 6 ஒரு ஓட்டு வித்தியாசத்தில் மேனாள் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தோல்வியடைந்தது தொடர்பாக வழக்கு தொடரப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார். சென்னை அண்ணா அறிவால யத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டா லினை நேற்று கூட்டணிக் கட்சி களின் தலைவர்கள், வெற்றி பெற்ற வேட்பாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அந்த வகையில், சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி:

மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம், ஏற்கிறோம். எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு குறித்து மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார். சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி மக்கள் என்னைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். சிறப்பாக செயல்படுவேன். நேர்மையாக செயல்படுவேன். திமுக பார்க்காத தோல்வியும் இல்லை, வெற்றியும் இல்லை. எங்கள் கடமையை நாங்கள் செய்தோம். மக்கள் முடிவு எடுத்துள்ளனர். காத்திருங்கள். ஆட்சி அமையும் போது பார்ப்போம். ஒரு வாக்கு வித்தியாசத்தில் கே.ஆர். பெரியகருப்பன் தோல்வியடைந்தது தொடர்பாக தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

சிவகங்கை மாவட்டம் திருப் பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83,375 வாக்குகளும், பெரியகருப்பன் 83,374 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதையடுத்து, ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி   வெற்றி பெற்றார் என்பது குறிப் பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *