தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடம்

1 Min Read

நியூயார்க், மே 6– வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தாய்நாட் டிற்காக அனுப்பும் பணத்தால், உலகிலேயே அதிக அன்னிய நாட்டு பணத்தை பெறும் நாடாக தொடர்ந்து இந்தியா முதலிடத்தில் உள்ளது என அய்.நா.,வின் புலம்பெயர்ந்தோர் முகமை நேற்று வெளி யிட்ட ‘உலக இடப் பெயர்வு அறிக்கை 2026’ தெரிவித்துள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டின் தரவுகளின் படி, இந்தியர்கள் 12.87 லட்சம் கோடி ரூபாயை தங்கள் தாய்நாட்டிற்காக அனுப்பியுள்ளனர். இதன் வாயிலாக உலகிலேயே அதிக அன்னிய பணத்தை பெறும் நாடாக தொடர்ந்து முதலிடத்திலும், 9.40 லட்சம் கோடி ரூபாய் என்ற மைல்கல்லை தாண்டிய ஒரே நாடாகவும் இந்தியா உருவெடுத்துள்ளது என அய்.நா.,வின் புலம் பெயர்ந்தோர் முகமை தெரிவித்துள்ளது.

இந்தியா பெறும் பணம், 2010இல் 5.03 லட்சம் கோடியாகவும், 2015ல் 6.48 லட்சம் கோடி யாகவும், 2020இல் 7.82 லட்சம் கோடியாகவும், 2024இல் 12-.87 லட்சம் கோடி ரூபாயாகவும் அசுர வளர்ச்சி கண்டுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோர் இந்தியாவின் தொழில் நுட்ப துறையின் வளர்ச் சிக்கும், பொருளாதார நிலைத்தன்மைக்கும் முது கெலும்பாக இருப்பதாக ஐ.நா., பாராட்டு தெரிவித் துள்ளது.

கடந்த, 2024ம் ஆண்டு தரவுகளின்படி, இந்தியா, மெக்சிகோ, பிலிப்பைன்ஸ் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் உலகளவில் அதிக பணத்தை பெற்ற முதல் நான்கு நாடுகளாக இருந்தாலும், மற்ற மூன்று நாடுகளை விட பல மடங்கு அதிகமாக இந்தியா பெற்றுள்ளதாக அய்.நா., தெரிவித்துள்ளது.

மேலும், பன்னாட்டு அளவில் கல்வி கற்க செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையில் சீனா முதல் இடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *