புதுச்சேரியில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா, கருத்தரங்கம்

புதுச்சேரி, மே 3- பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா படத் திறப்பு, மலர் வணக்கம், கருத்தரங்கம் எனச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

மே தினத்தை முன்னிட்டு 01-05-2026 அன்று மாலையில் புதுச்சேரி பெரியார் படிப்பகத்தில் திராவிடர் கழகக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

தொடர்ந்து ‘புதியதோர் உலகு செய்வோம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கு. இரஞ்சித்குமார் தலைமையில் புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பா. குமரன் வரவேற் புரை ஆற்றினார்.

தொடர்ந்து புதுச்சேரி தன்னுரிமை கழகத் தலைவர் தூ.சடகோபன், கொம் யூன் கழகப் பொறுப்பாளர் இராம.சேகர், அரசு ஊழியர் அய்க்கியப் பேரவைத் துணைப் பொதுச் செயலாளர் மணித். கோவிந்தராஜ், புதுவை இளைஞர் அமைதி மையத்தின் தலைவர் செ.ஆதவன், புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நெ.நடராசன், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வே. அன்பரசன் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் படத்தை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைச் செயலாளர் வி.இளவரசி சங்கர் திறந்துவைத்து உரையாற்றினார்.

அண்மையில் மறைந்த திராவிடர் இயக்கப் பாடகர் தேனிசை செல்லப்பா அவர்களின் படத்தை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர். துரை. சந்திரசேகரன் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து நாற்பதாண்டு களுக்கும் மேலாக இலக்கியப் பணி ஆற்றி வரும் திருக்குறள் சண்முகம் அவர்களுக்கு சால்வை அணிவித்து பெரியார் சிலையை நினைவுப் பரிசாக வழங்கினார்.

விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கே.மு.தமிழ்ச்செல்வன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப் பினர் கி.அறிவழகன், நகராட்சி மற்றும் கொம்யூன் கழக பொறுப்பாளர்கள் எஸ். கிருஷ்ணசாமி, மு.ஆறுமுகம், திருச்சி இரா.திருநாவுக்கரசு, பகுத்தறிவுக் கலைக்குழு தலைவர் புதுவை. பிரபா, திராவிடர் கழக மகளிரணி தோழியர்கள் ஜெ.ஜெயந்தி, ஜெ.வாசுகி, இலட்சுமி, சுமதி நல்லையன், பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் மு.ந.ந.நல்லையன், மாணவர் கழகத் தலைவர் பெ.அறிவுச்செல்வன், பெரியார் சிந்தனையாளர் இயக்க ஒருங்கிணைப்பாளர் அ.ச.தினா, ஆனந்தி தினா, பசுபதி, வீர.இராகு, திராவிட மில்லர், சாரதி, கடலூர் சிவக்குமார், சிந்தனையாளர் பேரவை சரஸ்வதி வைத்தியநாதன், சுந்தரகாசி மணியன், ஜெய.கவுரி, குணசேகரன், ஆய்வாளர் மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

கருத்தரங்கில் உரையாற்றிய முனைவர். துரை.சந்திரசேகரன் தன்னுடைய உரையில் திராவிடர் இயக்கத்திற்கும் புதுச்சேரிக்கும் உள்ள தொடர்பை சுட்டிக் காட்டினார்.

தந்தை பெரியார் புதுச்சேரி வழியாகத்தான் ரஷ்யா நாட்டிற்கு பயணப்பட்டு சென்றது, புதுச்சேரி கெப்ளே தியேட்டர் இன்றைய கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க மாநாட்டில் சிறுவனாக தமிழர் தலைவர் நாடகத்தில் பங்கேற்றது, அப்பொழுது ஏற்பட்ட கலவரத்தை நேரில் பார்த்த ஒரே சாட்சியாக உள்ளார். கலவரத்தில் முத்தமிழறிஞர் கலைஞர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் போன்றவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் போன்ற பழமையான நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தார்.

மயிலாடுதுறை பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் பேச்சைக் கேட்டு அதன் மூலம் பாரதிதாசன் சுயமரியாதை இயக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். சுப்பிரமணி துதி அமுது பாடிய அவர்தான் பிற்காலத்தில் புதியதோர் உலகு செய்வோம் என்ற நிலையில் பல பாடல்கள் மூலம் அவரின் சிந்தனை மற்றும் கருத்துக்களை விரிவான முறையில் எடுத்துக் கூறினார்.

சுருக்கமாக சொல்வதென்றால் தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கருத்துக்களைப் பாடல் மூலமாக வடிவமைத்த பெருமை பாரதிதாசனுக்கு உண்டு. புரட்சிக் கவி என்ற தழுவல் நூலை அவர் சிறப்பாக எழுதினாலும் அவரின் சுயமரியாதை இயக்க பற்றினால் தான் அவருக்கு புரட்சிக் கவிஞர் என்ற பட்டத்தை மக்கள் அளித்தது மகிழ்ந்தன” என்று குறிப்பிட்டு, நிறைவாக தொழிலாளர் நாளின் சிறப்புகள் திராவிடர் தொழிலாளர் கழகத்தின் செயல்பாடுகள் அணுகுமுறை பற்றியும் திராவிடர் கழகத்தில் இளைஞர்கள் சேர வேண்டியதின் அவசியம் பற்றியும் எடுத்துக் கூறினார்.

நிறைவாக அண்மையில் காலமான தேனிசை செல்லப்பா, புதுச்சேரி தனித் தமிழ்க் கழகத்தின் செயலாளர் சீனு.அரிமாப் பாண்டியன் ஆகியோரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கும் வகையில் இரண்டு நிமிடம் அமைதி கடைப்பிடிக்கப்பட்டது.

மறைந்த தலைவர்களுக்கு புகழ் வணக்கம் மற்றும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

நிறைவாக விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் ஆ.சிவராசன் நன்றி கூறினார்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *