நாடு முழுவதும் மே மாதம் இயல்பை விட அதிக மழைப்பொழிவு இருக்கும்! வானிலை மய்யம் தகவல்

1 Min Read

புதுடில்லி, மே 3- இந்திய வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மே மாதத்திற்கான சராசரி மழைப்பொழிவு 110 சதவீதம் வரை இருக்கும் என இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வெப்ப அலை தாக்கம் குறைய வாய்ப்பு உள்ளது.

இந்த ஆண்டு பெரும் பாலான பகுதிகளில் இயல்பை விட அதிக மழை பெய்யக்கூடும் என்பதால், இது ஆரம்ப கால வெப்ப அலைகளில் இருந்து மக்களுக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும். இருப்பினும், மழைப் பரவல் நாடு முழுவதும் சீராக இருக்காது என்றும், வடகிழக்கு மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் வழக்கத்தை விடக் குறைவான மழையே பெய்ய வாய்ப்புள்ளது.

வானிலை செயல்பாடுகளைப் பொறுத்தவரை, மே 5-ஆம் தேதி வரை மேற்கு வங்காளம், சிக்கிம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்தில் வீசும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல், மே 3 முதல் மே 6 வரை வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவின் சமவெளிப் பகுதிகளிலும், கிழக்குக் கடற்கரை மாநிலங்களிலும் இடி மற்றும் புயல் செயல்பாடுகள் இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி கேரளாவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு மே இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்திலேயே தொடங்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *