சமையல் எரிவாயு உருளை விலை உயர்வு: மக்களின் துயரை எண்ணிப் பார்த்துத் தீர்வு காணுங்கள்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

1 Min Read

சென்னை, மே 2   நேற்று (1.5.2026)  மாதத்தின் முதல் நாள் என்பதால், சமையல் எரிவாயு உருளை விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.993 உயர்ந்து ரூ.3,237 ஆக விற்பனை செய்யப்படுகிறது. வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை விலை அதிரடியாக உயர்த்தப்பட்டதால் வணிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் சிலிண்டர் விலை உயர்வு தொடர்பாக வெளி யிட்டுள்ள ‘எக்ஸ்’ தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

மக்களின் துயரை எண்ணிப் பார்த்து தீர்வு காணுங்கள்!

தேர்தலுக்கு முன்பே கணித்தது போல், தேர்தல் முடிந்தவுடன் எல்.பி.ஜி. விலையை உயர்த்தியிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போது, அதன் பலனை மக்களுக்கு அளிக்கவில்லை. இப்போது மேற்காசிய போர் என்ற நெருக்கடியை வைத்து, மக்களின் நலனை எண்ணாமல், விலையை ஏற்றுவது சரியல்ல.

இந்த எல்.பி.ஜி விலை உயர்வு ஏற்படுத்தும் தாக்கங்களை உணர்ந்து, இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு ள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *