கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 2.5.2026

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* அடுத்த வாரம் ‘இண்டியா’ கூட்டணி தலைவர்கள் சந்திப்பு; தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரின் நடவடிக்கைகள் உள்ளிட்ட விஷயங்களை விவாதிக்க ஒன்று சேருகின்றனர்.

* நாடு முழுவதும் வர்த்தக எரிவாயு உருளை (சிலிண்டர்) விலை நேற்று ரூ.993 அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. வரலாற்றில் ஒரே நாளில் ரூ.1000 அளவிற்கு விலை உயர்த்தப்பட்டு ரூ.3 ஆயிரத்தை தாண்டியதால் உணவக உரிமையாளர்கள் அதிர்ச்சி.

* தேர்தல் முடிந்து இரண்டு நாட்களில் எரிவாயு விலை உயர்வு. எதிர்க்கட்சிகள் கண்டனம்.

* மகாராட்டிராவில் வாழும் அனைவரும் மராத்தி பேச வேண்டும், முதலமைச்சர் பட்னாவிஸ் கண்டிப்பு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

*வணிக எரிவாயு உருளை விலை உயர்வு என்பது ‘தேர்தல் கட்டணம்’ என்று பிரதமர் மோடி அரசை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம்

தி இந்து:

* தி.மு.க. தொண்டர்களின் கடின உழைப்பு மே 4-ஆம் தேதி பலனளிக்கும்: சென்னையில் உள்ள மே தினப் பூங்காவில் நேற்று (1.5.2026) அன்று நடைபெற்ற பன்னாட்டு தொழிலாளர் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நம்பிக்கை

தி டெலிகிராப்:

* விமானக் கட்டண உயர்வு விவகாரத்தில் ஒன்றிய அரசை சாடிய உச்சநீதிமன்றம்; அதிகப்படியான பயணப் பருவங்களில் விமானக் கட்டணங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பான பதிலைத் தெரிவிப்பதில் ஏற்பட்ட தாமதம் குறித்து உச்ச நீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்பியது.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *