‘500 பணிகளுக்கு விண்ணப்பித்தும் வேலை கிடைக்கவில்லை’ பிரிட்டனில் பட்டப்படிப்புக்காக ரூ.1 கோடி செலவு செய்ததாக எகிப்து இளைஞர் வேதனை

1 Min Read

லண்டன், ஏப்.30 – எகிப்து நாட்டை சேர்ந்தவர் காலித் ஷெரீப். இவரது பெற்றோர் எகிப்தில் இருந்து கத்தார் நாட்டில் குடியேறினர். அங்கு பள்ளிப் படிப்பை நிறைவு செய்த காலித் தன்னுடைய 18ஆவது வயதில் உயர் கல்விக்காக பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு சென்றார்.

லண்டனின் புறநகர் பகுதியில் உள்ள கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் டிஜிட்டல் மீடியா தொழில் நுட்பத்தில் பட்டம் பெற்றார். இதற்காக அவர் மொத்தம் ரூ.1.04 கோடியை செலவு செய்து உள்ளார். இதன் பிறகு பிரிட்டனில் ஏதாவது ஒரு வேலையில் சேர திட்டமிட்ட காலித் இதுவரை 500-க்கும் மேற்பட்ட பணிகளுக்காக விண்ணப்பித்தார். ஆனால் 20 நிறுவனங்கள் மட்டுமே அவரை நேர்முகத் தேர்வுக்கு அழைத்தன. அதிலும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவர் கூறியதாவது: பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளேன். ஆனாலும் பிரிட்டனில் எனக்கு வேலை கிடைக்கவில்லை.

எனக்கே இந்த நிலை என்றால், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களின் நிலை இன்னமும் மோசமாக இருக்கிறது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உள்ளிட்ட காரணங்களால் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன.

பள்ளிப் படிப்பை நிறைவு செய்தவர்களுக்கு சூப்பர் மார்க்கெட்டில் எளிதாக வேலை கிடைக்கிறது. ஆனால், பட்டதாரிகளுக்கு வேலை கிடைப்பது மிகவும் கடினமாகி விட்டது. நீண்ட தேடலுக்குப் பிறகு சொந்தமாக ஜவுளி நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளேன். அதோடு பகுதிநேர படப்பிடிப்பாளர், நிழற்படக் கலைஞராகவும் பணியாற்றி வருகிறேன். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அப்போதுதான் வேலை வாய்ப்பின்மை பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *