சென்னை மாநகராட்சி பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்பட்டதால் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

3 Min Read

சென்னை, ஏப்.30 தனியார் பள்ளிகளுக்கு இணையாக சென்னை மாநகராட்சி பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டதன் எதிரொலியாக மாணவர் சேர்க்கையானது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.

சென்ைன மாநகராட்சி பள்ளிகள் இதுவரை மட்டும் 5,000 பேர் சேர்ந்த நிலையில் மே மாதத்துக்குள் 7 ஆயிரமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் சென்னை மாநகராட்சி பள்ளியா என்று ஒரு கனம் யோசித்த பெற்றோர்கள் இப்போது சென்னை மாநகராட்சி பள்ளிகளை தேடி சென்று சேர்க்கை சேரும் அளவுக்கு அதன் தரம் உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன் அடிப்படையில், ஆம் ஆத்மி ஆட்சியின் போது டில்லி சென்ற அவர் அங்கு அமைக்கப்பட்டுள்ள மாடல் பள்ளிகளை ஆய்வு செய்தார். அதேபோல, தமிழ்நாட்டிலும் செயல்படுத்தும் பணிகளை முடுக்கிவிட்டார். அதன்படி, சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் பள்ளிகளில் டிஜிட்டல் முறையிலான வள வகுப்பறைகள் அமைத்தல், பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் எதிரொலியாக இன்று சென்னை மாநகராட்சி பள்ளிகள் ‘சிட்டீஸ்’ மற்றும் ‘நமக்கு நாமே’ திட்டங்களின் கீழ், பிரான்ஸ் நாட்டு உதவியுடன் பன்னாட்டு தரத்தில் நவீனமயமாகி வருகின்றன. ஸ்மார்ட் வகுப்பறைகள், எல்.இ.டி டிவி, இணைய வசதி, நவீன கழிப்பறைகள் மற்றும் விளையாட்டு மைதானங்களுடன் கூடிய உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு, தனியார் பள்ளிக்கு நிகராக வண்ணமயமான ஓவியங்களுடன் மாற்றப்பட்டுள்ளன.

இந்தத் தொழில்நுட்ப மேம்பாடு, மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் உள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்மார்ட் வகுப்பறைகள் மூலம், ஆசிரியர்கள் நவீன கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்தி மாணவர்களுக்குப் பாடங்களை எளிதாகவும் சுவாரஸ்யமாகவும் கற்பித்து வருகின்றனர். இது மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த உதவும் வகையில் உள்ளது.

இதன் எதிரொலியாக பலர் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்புகின்றனர். மேலும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தும் வகையில் பொதுமக்கள் மத்தியில் வீடு வீடாக சென்று விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி, இதுவரையில் சுமார் 5000க்கும் மேற்பட்ட புதிய மாணவ, மாணவிகள் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வரும் வாரங்களில் இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க மாநகராட்சி அதிகாரிகள் இலக்கு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

தரம் உயர்த்தப்பட்ட சென்னை மாநகராட்சி பள்ளிகளால் இன்று மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏப்ரல் மாதத்தின் 3ஆவது வாரம் வரையில் மாநகராட்சிப் பள்ளிகள் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது. மேலும் இந்த மாத இறுதிக்குள் சேர்க்கை எண்ணிக்கை 6 ஆயிரத்தை எட்டும். அத்துடன் மே மாதத்துக்குள் இது 7 ஆயிரம் வரை அதிகரிக்கும். என்று எதிர்பார்க்கிறோம்.

கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கையைவிட இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க முயற்சிகள் மேற் கொண்டு வருகிறோம். கடந்த 2025ஆம் ஆண்டு மே மாதம் வரை சென்னை மாநகராட்சி நிர்வாகம் தனது பள்ளிகளில் 13 ஆயிரத்து 800 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கையை கடந்து மாணவர் சேர்க்கை இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மாணவர் சேர்க்கை அதிகரிப்பு ஒருபுறம் இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் 100 சதவீத தேர்ச்சியை ஏற்படுத்தும் நடவடிக்கையை சென்னை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் தொடங்கியுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *