புதுவை பள்ளிகளில் பிரெஞ்சு மொழி நீக்கம் – தி.மு.க. போராட்டம் அறிவிப்பு!

2 Min Read

புதுச்சேரி, ஏப்.28 புதுச்சேரியில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 2026-2027 கல்வியாண்டு முதல் பிரெஞ்சு மொழி நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தேசியக் கல்விக் கொள்கையின்படி, பள்ளிகளில் ஒரு வெளிநாட்டு மொழியை மட்டுமே அனுமதிக்க முடியும் என்பதால், பிரெஞ்சு மொழி நீக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இரண்டாம் மொழியாகப் பிரெஞ்சு பயின்று வந்த மாணவர்கள், தாங்கள் ஏற்கனவே பயின்ற பழைய மொழிக்கே மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பிரெஞ்சு பயின்ற மாணவர்களின் எதிர்காலம் குறித்த கவலைகளைக் கல்வியாளர்கள் எழுப்பி யுள்ளனர்.

மேலும் 6-ஆம் வகுப்பு முதல் ஹிந்தி அல்லது சமஸ்கிருதம் போன்ற மொழிகளைக் கட்டாயமாக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் மும்மொழி கொள்கையால் பிரெஞ்சு மொழி நீக்கப்பட்டதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் போரட்டமும் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக புதுவை மாநில எதிர்கட்சி தலைவர் சிவா வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 2026-2027 கல்வியாண்டு முதல், ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்கும் புதிய அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. மும் மொழி பாடத்திட்டத்தின் திணிப்பினால், ஒரு வெளிநாட்டு மொழி, இரு பிராந்திய மொழிகள் படிக்கலாம் என்று சொல்லி, ஆங்கிலத்தை மட்டும் வைத்துக்கொண்டு, பிரெஞ்சு பாடம் நீக்கப்பட்டுள்ளது.

இது மாணவர்களின் கல்விச் சுமையை அதிகரிப்பதோடு, அவர்களின் இயல்பான கற்றல் முறையையும் பாதிக்கும் செயலாக அமைந்துள்ளது. 7 நாட்களில் இதை அமல்படுத்த கூறியிருப்பது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மிகுந்த கண்டனத்திற்குரியது.

இந்த அறிவிப்பு புதுவை மண்ணின் தனித்துவமான பிரெஞ்சு கலாச்சார அடையாளத்தையும், அதன் நீண்டகால மொழி வரலாற்றையும் சிதைக்கும் வஞ்சகச் செயலாகும். பிரெஞ்சு மொழியைத் தங்கள் வாழ்வியலின் ஒரு பகுதியாகக் கொண்டுள்ள புதுச்சேரி பூர்வகுடி மக்களின் உரிமையை இது நேரடியாகப் பறிக்கிறது.

மேலும், பல ஆண்டுகளாக பிரெஞ்சு மொழி பயிற்றுவித்து வரும் ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களின் வேலைவாய்ப்பையும் இந்தத் தன்னிச்சையான முடிவு கேள்விக்குறியாக்கியுள்ளது. மக் களின் விருப்பத்தைக் கேட்காமல் எடுக்கப்பட்டுள்ள இந்தத் தன்னிச்சை யான முடிவை ஒன்றிய அரசு உடனடி யாகத் திரும்பப் பெற வேண்டும்.

பன்முகத்தன்மையைச் சிதைக்கும் இத்தகைய எதேச்சதிகார மொழித் திணிப்பு நடவடிக்கைகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். புதுவை மாநில திமுக சார்பில் கல்வி துறையை கண்டித்து மிகப்பெரிய மொழி உரிமை போராட்டம் நடத்தப்படும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *