தலை சிறந்த பாடகரும், ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக் களத்தில் இசைமூலம் தொண்டாற்றியவருமான தேனிசை செல்லப்பா
(வயது 85) அவர்கள் நேற்று (27.4.2026) காலமானார் என்ற செய்தியை அவரது மகன் இளங்கோ செல்லப்பா மூலம் அறிந்து மிகவும் வருந்துகிறோம்.
வெண்கல நாதக் குரலால் அவர் திராவிடர் இயக்க மேடைகளில், அந்நாளில் பாடி மக்களை ஈர்த்தது என்றும் மறக்க முடியாத ஒன்று.
இடையில் அவர் அணி மாறினாலும், தன் பணி மறந்தாரில்லை.
அவரை இழந்து துயருறும் அவரது குடும்பத்தாருக்கு, குறிப்பாக அவரது மகனுக்கு நமது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
28.4.2026

