சென்னை தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைமுறையில் அதிரடி மாற்றம்!

2 Min Read

மதிப்பெண்களைத் தாண்டி மாணவர்களின் தனித்திறமைக்கு முக்கியத்துவம்

சென்னை, ஏப். 27- தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியாக உள்ள நிலையில், சென்னையின் முன்னணித் தனியார் கல்லூரிகள் 2026-2027ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகளில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன.

மதிப்பெண்களைத் தாண்டி மாணவர்களின் தனித்திறமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்தப் புதிய நடைமுறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது

கணினி அறிவியல் மற்றும் விஷூவல் கம்யூனிகேஷன் (விஸ்காம்) போன்ற பாடப்பிரிவுகளில் சேர விரும்பும் மாணவர்கள், தங்களின் படைப்புகளைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணினி அறிவியல்/பிசிஏ

குறியீடுகள் (Coding) வடிவமைப்பதில் ஆர்வம் கொண்ட மாணவர்கள், தங்களின் புரோகிராம்களை ‘கிட்ஹப்’ (GitHub) தளத்தில் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும்.

விஷூவல் கம்யூனிகேஷன்

கலைப் பாடங்கள் பயின்ற மாணவர்கள் தங்களின் படைப்பாற்றலை நிரூபிக்கும் வகையில் ‘பிஹேன்ஸ்’ (Behance) தளத்தில் போர்ட்போலியோ (Portfolio) உருவாக்கி இருக்க வேண்டும்.

மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி (MCC):

இக்கல்லூரி இந்த ஆண்டு 10 சதவீத கூடுதல் ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண்களைப் படைப்புத் தொகுப்புகளுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக, கலைப் பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெறாத, ஆனால் அதிகத் திறமை கொண்ட மாணவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும்.

மகளிர் கிறிஸ்தவக்
கல்லூரி (WCC):

வணிகவியல், கணினி அறிவியல் மற்றும் முதுகலை படிப்புகளுக்கு நேர்காணல் நடத்தத் திட்டமிட்டுள்ளது.

மேலும், வளர்ந்து வரும் துறைகளான செயற்கை நுண்ணறிவு (ஏஅய்), டேட்டா சயின்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் விளக்கும் வகையில் பேராசிரியர்கள் ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.

ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி

மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்க்கத் தலைசிறந்த ‘Chatbot’ வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. மே முதல் வாரத்தில் இணைய வழிப் பதிவுகள் தொடங்குகின்றன.

எத்திராஜ் மற்றும் டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரிகள்

எத்திராஜ் கல்லூரியில் மே 2ஆம் தேதி முதல் விண்ணப்பப் பதிவு தொடங்குகிறது. எம்.சி.சி மற்றும் டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரிகள் ஏற்கெனவே இணைய வழிப் பதிவுகளைத் தொடங்கிவிட்டன.

பெரும்பாலான கல்லூரிகள் அடுத்த வாரமே இணைய வழிப் பதிவுகளைத் தொடங்கினாலும், சிபிஎஸ்இ மற்றும் மாநில பாடத் திட்டத் தேர்வு முடிவுகள் வெளியான பிறகே முறையான சேர்க்கை மற்றும் கலந்தாய்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு கட்-ஆப் மதிப் பெண்களுடன் மாணவர்களின் செயல் முறைத் திறனும் சேர்க்கையைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும் என்பதால், மாணவர்கள் இப்போதே தங்களின் போர் ட்போலியோக்களைத் தயார் செய்ய அறிவுறுத்தப் படுகிறார்கள்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *