‘விபி-ஜி ராம் ஜி’ திட்டமும் செயல்படவில்லை!

1 Min Read

ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில்
மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டம் சீர்குலைப்பு!

புதுடில்லி, ஏப்.27– மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) சீர்குலைத்த பிறகு ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட விபி- ஜி ராம் ஜி (விக்சித் பாரத்-உத்தரவாதம் மற்றும் ஆஜீவிகா இயக்கம் (கிராமின்)) திட்டம் இன்னும் செயல்படுத்தப்படாததால், வேலைவாய்ப்பு உறு தித்திட்ட தொழிலாளர்கள் ஒரு மாதமாக வேலை இழந்துள்ளனர்.

இத்திட்டம் குறித்து மாநில அரசுகளுக்கோ அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்கோ எந்த அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்க வில்லை. அதற்கான நடைமுறைகள் குறித்தும் தெளிவு இல்லை. ஒன்றிய அரசின் உத்தரவு கிடைத்தா லும், அதை நடைமுறைப்படுத்த குறைந்தபட்சம் 6 மாதங்களாவது ஆகும். புதிய திட்டம் அமலுக்கு வரும் வரை, வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ஒன்றிய அரசு முயற்சிக்கவில்லை. 2026–2027 நிதியாண்டிற்கான வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் செயல் திட்டம் மற்றும் தொழிலாளர் பட்ஜெட்டிற்கு ஒன்றிய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.

2024 ஏப்ரலில் 2,81,614 வேலை நாட்களை யும், 2025 ஏப்ரலில் 5,78,705 வேலை நாட்களையும் வழங்குமாறு கேரள அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளால் இதைச் செய்ய முடிந்துள்ளது. இருப்பி னும், இந்த ஆண்டு ஏப்ரல் 23 வரை 83,916 வேலை நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட வேலையின் தொடர்ச்சியாகும்.

விபி-ஜி ராம் ஜி திட்டம், வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் உண்மையான உள்ள டக்கத்தைச் சிதைப்பதாக ஏற்கெனவே குற்றம் சாட்டப்பட்டது. இத்திட்டத்தின் செல வில் 60 சதவிகிதத்தை ஒன்றிய அரசும், 40 சதவிகிதத்தை மாநில அரசும் ஏற்கும். இதனால், மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,600 கோடி இழப்பு ஏற்படும். முன்பு, இந்த விகிதம் 90:10 ஆக இருந்தது மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டம் சீர்குலைப்புப் போன்று விபி-ஜி ராம் ஜி திட்டமும் சீர்குலைக்கப்பட்டுள்ளது.

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *