செலவுக் கணக்கில் வராத ரூ.54,282 கோடி முறைகேடு! 15 அமைச்சகங்கள் செலவுக்குரிய ஆவணங்களை வழங்க முடியாமல் தவிப்பு!

புதுடில்லி, ஏப். 27 – செலவு கணக்கில் வராமல் ரூ.54,282 கோடி நிதி முறை கேடு செய்யப்பட்டிருப்பதாக சி.ஏ.ஜி. அறிக்கைமூலம் ஒன்றிய பா.ஜ. அரசின் வெளிப்படைத்தன்மையற்ற நிர்வாகத்தின் ஊழல் அம்பலமாகி உள்ளது. 15 அமைச்சகங்கள் செய்த செலவுக்கு உரிய ஆவணங்களை வழங்க முடியாமல் தவிப்ப தும் தெரியவந்துள்ளது. கடந்த 2025 மார்ச்சுடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான நிதி தணிக்கை அறிக்கை இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (சி.ஏ.ஜி.) சார்பில் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

சி.ஏ.ஜி. அறிக்கை

இதில், ஒன்றிய அரசின் கணக்குகளில் ரூ.54,282.32 கோடி நிதி கணக்கில்வராத செலவினமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 15 அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மொத்தம் 33,973 பயன்பாட்டுச் சான்றி தழ்களை வழங்காமல் நிலுவையில் வைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ்கள் வழங்கப்படாததால் ஒதுக்கப்பட்ட நிதி திட்டமிட்ட நோக்கங்க ளுக்காக பயன்படுத்தப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திட முடியவில்லை என சி.ஏ.ஜி. அறிக்கை கூறுகிறது.

இதில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவ கார அமைச்சகம் அதிகபட்சமாக ரூ.18,272.91 கோடி நிலுவைத் தொகையை வைத்துள்ளது.

உயர்கல்வித் துறை ரூ.14,359.76 கோடி செலவுக்கான கணக்கை இன்னும் தாக்கல் செய்யாமல்  உள்ளது. நிலுவையில் உள்ளதொகையில் ரூ.38,287.52 கோடி கடந்த 3 நிதியாண்டுகளுக்கு உரியது. இது தவிர, ரூ12,754.47 கோடிமதிப்பி லான செலவினங்கள்தவறான கணக்கு தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள தாகவும் சி.ஏ.ஜி. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உதாரணமாக அணு சக்தி துறை ரூ.3,089.97 கோடி வருவாய் செலவினங்களை செய்து, அவற்றை மூலதன தலைப்புகளின் கீழ்வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது தடை செய்யப்பட்ட கடுமையான நடவடிக்கை என சி.ஏ.ஜி. சுட்டிக்காட்டி உள்ளது.

மேலும், ரூ.4,011.91 கோடி மதிப்பி லான வரவுகளிலும் முறைகேடுகள் கண்ட றியப்பட்டுள்ளன. அவை தவறான வரி வருவாயாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய தவறுகள் அரசின் உண்மை யான நிதி நிலைக்கு எதிரான பார்வையை அளிப்பதாக சி.ஏ.ஜி. அறிக்கை எச்சரித்துள்ளது. அரசு வசூலித்த வரிகள் மற்றும் செஸ் வரியிலிருந்து ரூ.9,222 கோடி நிதி, கல்வி, சுகாதாரம் போன்ற குறிப்பிட்ட ஒதுக்கீடு செய்யப்பட்ட நோக்கங்களுக்கு இன்னமும் மாற்றப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. எந்த நோக்கத்திற்கு செலவு செய்யப்பட்டது என்பதை மறைக்கும் வகையில் 50 சத வீதத்திற்கும் அதிகமான செலவினங்கள் இதர வரவு – செலவுக்கான மைனர் ஹெட் 800 என்ற பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. இப்பிரிவு ஒரு முதன்மை பதிவுப் பிரிவாக மாற்றப்பட்டுள்ளது.

வெளியுறவு துறை அமைச்சகத்தில் ரூ.44,714.77 கோடி தவறான பரி மாற்ற பதிவால் பாதகமான இருப்பு ஏற்பட்டுள்ள தாகவும் சி.ஏ.ஜி. கூறுகிறது. ரிசர்வ் வங்கி யுடன் ஒப்பிடுகையில், ஒன்றிய அரசின் கணக்குகளில் ரூ.3,880.67 கோடி ரொக்க இருப்பு இன்னும் சரிபார்க்கப்படாமல் இருப்பதாகவும் சி.ஏ.ஜி. கூறி உள்ளது. செலவு செய்த நிதிக்கு 15 அமைச்சகங்கள் கணக்கு தராமல் இருப்பதன் மூலம் ரூ.54 ஆயிரம் கோடி ஊழல் செய்யப்பட்டிருப்பதாகவும், பொதுமக்களின் வரிப்பணத்தை கையாள்வதில் ஒன்றிய அரசு பொறுப்பற்ற முறையில்இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. இது தொடர்பாக நாடாளுமன்றத்தின் பொது கணக்குகுழு விரிவான விசாரணை நடத்தவும் வலி யுறுத்தி உள்ளன.

ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை!

இவ்வளவு பெரிய தொகைக்கு பயன்பாட்டு சான்றிதழ்கள் வழங்கப்படாமல் இருப்பதும், தவறான வகைப்பாட்டில் இருப்பதும் பட்ஜெட் தாக்கலையே தவறாக காட்டக் கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இது, ஒன்றிய அரசின் நிதி நிர்வாகத்தை ஒழுங்குபடுத்துவதற்கான எச்சரிக்கை மணியாக பார்க்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *