கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 24.4.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

*தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்புத் திருத்தம் காரணமாக 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்; இதுவே அதிக சதவீதம் வாக்களிப்பு என கூறுவதற்கு காரணம் என்கிறார்கள் தேர்தல் ஆய்வாளர்கள்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* தமிழ்நாட்டில் தேர்தல் அமைதியாக நடைபெற்றது. காலை 7 மணிக்கே வாக்குச்சாவடிகளில் ஆர்வத்துடன் குவிந்த மக்கள் தமிழ்நாட்டில் 85% வாக்குப்பதிவு: கரூர் மாவட்டத்தில் அதிக வாக்குகள்: கன்னியாகுமரி மாவட்டத்தில் குறைவு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மணிப்பூரில்  தொடரும் வன்முறை: போராட்டங்கள் தொடர்வதால் கல்வி நிறுவனங்கள் மூடல்; போக்கு வரத்து பாதிப்பு

தி இந்து:

*இஸ்ரேல்-காசா மோதல் குறித்து மோடியின் மவுனம் என காங்கிரஸ் கண்டனம். இஸ்ரேலில் உள்ள ஒரு “கொலையாளி ஆட்சிக்கு” (MURDEROUS REGIME) முந்தைய எந்த அரசும் இத்தகைய “ஒற்றுமையை” வெளிப்படுத்தியதில்லை என்றும் விமர்சனம்.

தி டெலிகிராப்:

* ஜே.என்.யு. பல்கலைக்கழக ஊழியர்களின் குழந்தைகளுக்கு 5% இடஒதுக்கீடு அளிப்பதற்கு ஜே.என்.யு. ஆசிரியர்கள் எதிர்ப்பு; இம்முடிவு பிற்போக்குத்தனமானது மற்றும் சமத்துவமற்றது என விமர்சனம்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* மோடியின் உரை தூர்தர்ஷன் மற்றும் சன்சத் டிவி ஆகிய அலைவரிசைகள் ஒளிபரப்பியதன் மூலம் தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி, காங்கிரஸ் நிர்வாகி டி.என். பிரதாபன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *