டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* நிதிஷ் குமாரின் ஜேடியு கட்சியின் நிர்வாகிகள் பட்டி யலில் நிதிஷ் மகன் நிஷாத் நீக்கம். புதிய நிர்வாகிகள் நியமனம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மு.க.ஸ்டாலின், மம்தா மீண்டும் வெற்றி பெறவே அதிக வாய்ப்பு, தலையங்கம்.
* பிரியங்கா காந்திக்கு மேலும் முக்கியத்துவம் தர காங்கிரஸ் தலைமை முடிவு; சட்டமன்ற தேர்தலுக்கு பின் இது குறித்து அறிவிப்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பீகாரில் படிப்பு காலத்தில் திருமணம் கூடாது? கடும் எதிர்ப்பால் அறிவிப்பை ரத்து செய்த பீகார் செவிலியர் பள்ளி; விசாரணை தொடக்கம். “கல்வியாண்டின் போது மாணவர்கள் திருமணம் செய்து கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது” என்று நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தாளில் (LETTERHEAT) ஏப்ரல் 16 அன்று வெளியிடப்பட்ட ஒரு கடிதத்தின் மூலமே இந்த சர்ச்சை தொடங்கியது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* முதல் கையெழுத்து ‘இல்லத்தரசி’ திட்டத்திற்கு தான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றதும் தான் இடும் முதல் கையெழுத்து ‘இல்லத்தரசி’ திட்டத்திற்கானதாகவே இருக்கும் என்று உறுதியளித்தார்;
– குடந்தை கருணா

