கேள்வி: தி.மு.க. வேட்பாளர்கள் “எங்களுக்கு ஆதரவாக வீரமணி பிரச்சாரம் செய்ய வேண்டாம்” என்று கூறுகிறார்களே, காரணம் என்ன?
பதில்: ஸ்டாலினும், உதயநிதியுமே தங்களுக்கு ஆதரவாகப் பேச கி.வீரமணியை அழைக்க அஞ்சும்போது, மற்ற – தி.மு.க. வேட்பாளர்கள் அவரைப் பிரச்சாரம் செய்ய எப்படி அழைப்பார்கள்?
– ‘துக்ளக்’ 29.4.2026 பக்கம் 26
‘நான் ஒரு அரசியல் புரோக்கர்தான்’ என்று சொன்னவர் ‘துக்ளக்’ குருமூர்த்தியின் குருநாதர் ‘சோ’ ராமசாமி!
இவர்கள் எல்லாம் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணியைப் பற்றிப் பேசலாமா?
1952 தேர்தல் முதல் நடக்கவிருக்கும் 17ஆவது சட்டமன்றத் தேர்தல் வரை தேர்தல் பணிகளில், பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்ட ஒரே தலைவர் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்!
93 வயதிலும் கொளுத்தும் கோடையிலும் அவரது தேர்தல் பிரச்சாரப் பணி தனித்தன்மையானது!
தி.மு.க. தலைவர்: முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களே, 93 வயது காணும் திராவிடர் கழகத் தலைவரின் தேர்தல் பிரச்சாரப் பணியை நெகிழ்ச்சியோடு பாராட்டுகிறார்.
திராவிடர் கழகத் தலைவர் செல்லும் இடங்களில் எல்லாம் பெருந்திரளாக மக்கள் கூடுகிறார்கள்.
எல்லாத் தொகுதிகளிலும் அழைப்புகள் வந்தாலும், போகமுடியாத நிலைதான் அவருக்கு!
இவ்வளவும் தெரிந்திருந்தும் ‘தினமலர்களும்’, ‘துக்ளக்குகளும்’ இப்படி எழுதுகின்றன என்றால், அதற்குக் காரணம் இருக்கிறது!
1971 சட்டமன்றத் தேர்தலில் இந்தக் கூட்டம் பட்ட “சூடு”தான் இதற்குக் காரணம்!
வெட்கமே இருக்காதா?

