‘திராவிட மாடல்’ ஆட்சியில் தகவல் தொழில் நுட்பப் புரட்சி!

தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி மற்றும் ‘டைடல் பார்க்’ திட்டங்களின் தாக்கம் குறித்து ஓய்வுபெற்ற இந்திய வருவாய் சேவை  அதிகாரி பாலமுருகன் பேசிய காணொலி காட்சிப்பதிவு தற்போது இணையதளத்தில் பெரும் விவாதத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பு குறித்து அவர் பகிர்ந்துள்ள முக்கியத் தகவல்கள் பின்வருமாறு:

ஒரு காலத்தில் சென்னை ஓஎம்ஆர் பகுதி மக்கள் செல்லவே அஞ்சும் புதர்கள் நிறைந்த காடாக இருந்தது என்று சுட்டிக்காட்டிய பாலமுருகன், அதன் இன்றைய மிகப் பெரும் வளர்ச்சிக்கு 1999-2000 ஆண்டுகளில் அப்போதைய முதலமைச்சர் கலைஞரால் கொண்டு வரப்பட்ட ‘டைடல் பார்க்’ தான் அடிப்படை காரணம் என்றார். இதுவே தமிழ்நாட்டில் அய்டி நிறுவனங்கள் கால்பதிக்க முக்கிய விதையாக அமைந்தது.

சென்னையைத் தாண்டி தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் ‘அய்.டி.’ (தகவல் தொழில் நுட்பம்) துறையைக் கொண்டு சென்ற பெருமை இந்தத் திட்டத்தையே சாரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்:

சென்னை ‘டைடல் பார்க்’கில் மட்டும் 12,000 பேர் பணியாற்றி வரும் நிலையில், கோவை, திருச்சி, மதுரை ஓசூர் மற்றும் பட்டாபிராம் என விரிவடைந்து தற்போது சுமார் 45,000 பேர் வேலை செய்யும் அளவிற்கு அய்டி துறை வளர்ந்துள்ளது.

விழுப்புரம், வேலூர், திருப்பூர், காரைக்குடி மற்றும் தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் ‘மினி டைடல் பார்க்குகள்’ உருவாக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் கிராமப்புற இளைஞர்கள் வேலை தேடி சென்னைக்கு வராமல், தங்கள் சொந்த மாவட்டத்திலேயே பணிபுரியும் வாய்ப்பு உருவாகிறது.

மேலும் 9 இடங்களில் ‘மினி டைடல் பார்க்குகள்’ அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

வெறும் வேலைவாய்ப்பு மட்டுமின்றி, புதிய தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் விதமாக ‘டைடல் துளிர்’ என்ற திட்டத்தின் மூலம் அரசு உதவிகளை வழங்கி வருகிறது.

“எதிர்காலத்தை முன்கூட்டியே சிந்தித்து திட்டங்களை வகுக்கும் ‘திராவிட மாடல்’ அரசின் செயல்பாடுகள் தான் இன்றைய இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உறுதிக்குக் காரணம்” என்று பாலமுருகன் தனது காட்சிப் பதிவில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும் இத்தகைய திட்டங்களை ஆதரிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர்  வலியுறுத்தியுள்ளார்.

தகவல் தொழில் நுட்பம் துளிர்விட்ட 1999 ஆம் ஆண்டே இதன் எதிர்காலத்தை கணக்கிட்டு துல்லியமான முடிவெடுத்த கலைஞரால் பின்னாலில் திமுக அட்சி இல்லாத போது தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் மெல்ல மெல்ல ஆந்திராவிற்கும் கருநாடகாவிற்கும் படை எடுத்த போது, 2021 ஆம் ஆண்டு மு.க. ஸ்டாலின் பதவி ஏற்றார்.

அதன் பிறகு தகவல் தொழில் நுட்பம் மீண்டும் தமிழ்நாட்டை மய்யம் கொள்ளத்துவங்கியது முக்கிய பெருநகரங்கள் மட்டுமல்லாது, தென் மாவட்ட நகரங்களிலும் தகவல் தொழில் நுட்ப பூங்காக்களை உருவாக்கித் தந்ததால் கிராமம் கிராமமாக பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் இன்று வேறு மாநிலங்களுக்குச்சென்று வாங்கும் ஊதியத்தை விட அதிகமாக தனது ஊருக்கு அருகில் உள்ள பெரு நிறுவனங்களிலேயே பெறுகின்றனர்.

‘திராவிட மாடல்’ அரசின் சாதனைகளை குறிப்பாக தகவல்தொழில் நுட்பத்துறை சாதனைகளை மேலும் உயரத்திற்குக் கொண்டு செல்லும் என்ற நம்பிக்கையோடு தனது பதிவில் கூறியுள்ளார்.

தொழில் வளர்ச்சியிலும் இந்தியாவிலேயே முதல் இடத்தில் தலை நிமிர்ந்து நிற்பதும் தமிழ்நாடே!

‘தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி’ என்றால் பெங்களூரு – அய்தராபாத் என்றிருந்த நிலை மாறி, இன்று தமிழ்நாடு முன் வரிசையில் கம்பீரமாக கைவரிசை காட்டி நிற்கிறது.

இளைஞர்களே, உங்கள் எதிர்காலம் தமிழ் மண்ணிலேயே பூத்துக் குலுங்குகிறது! இருகரம் நீட்டி வாரி அணைக்கிறது!

‘இருள்’ நீங்கிட ‘உதய சூரிய’னை மீண்டும் ஒளிரச் செய்வீர்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *