வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை மசோதா என்ற பெயரால்
கிறிஸ்தவ நிறுவனங்களை அழிக்கத் திட்டமிடும் ஒன்றிய பிஜேபி அரசு!
மசோதாவை திரும்பப் பெறக் கோரி வலியுறுத்தும் முதல் அமைச்சர் நமது மு.க.ஸ்டாலின் அவர்களே!
சென்னை, ஏப். 20– தி.மு.க. தலை மையிலான கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லினை நேரில் சந்தித்த பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகளின் பேராயர் கள் தெரிவித்துள்ளனர்.
முதல்-அமைச்சருடன் சந்திப்பு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில், ரோமன் கத்தோலிக்க இறைச்சபை, தென்னிந் தியத் திருச்சபை (சி. எஸ்.அய்.), இந்திய தேசிய தேவா லயங்கள் பேரவை, தமிழ்நாடு ஆயர்பேரவை, ஆர்த்தடாக்ஸ் திருச்சபை, இயேசு அழைக்கிறார் அமைப்பு, ஏ.ஜி.திருச்சபை, இந்திய நற் செய்தி திருச்சபை, சிரியோ-மலபார் கத் தோலிக்க திருச் சபை, இயேசு மீட்கிறார் அமைப்பு, தமிழ் சுவிசேஷ லூத்தரன் தேவாலயம், இரும் புலியூர் பெந்தேகோஸ்தே மிஷன் ஆகிய கிறிஸ்தவ அமைப்புகளின் பேராயர், முன்னாள் பேராயர் மற்றும்
நிர்வாகிகள் என 40-க்கும் மேற் பட்டோர் நேற்று (19.4.2026) நேரில் சந்தித்தனர்.
அப்போது, கிறிஸ்தவ சொத்துகள் மற்றும் தேவாலா யங்களை அழிக்கக் கூடிய “வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சீர்திருத்த மசோதா 2026”-வை எதிர்த்து முதலாவது நபராக குரல் கொடுத்து, தொடர்ந்து அந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருவதற்காக மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.
சட்டமன்ற தேர்தலில் ஆதரவு
மேலும் நாடாளுமன்றத்தில் மத்திய பா.ஜனதா அரசு கொண்டு வரும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சீர்திருத்த மசோதா 2026-வையும் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். சட்டசபைத் தேர்தலில் தோளோடு தோளாக, நின்று அத்தனை கிறிஸ்தவ அமைப்புகளும், கிறிஸ்தவ மக்களும், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக்கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்தனர்.
இந்த நிகழ்வில், தி.மு.க. எம் பி.யான பி.வில்சன் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
