இந்து விவசாயிகள் கூட்டுச் சேர்ந்துகொண்டு மிகக் குறைந்த அளவில் ஊதியம் கொடுக்க முடியும்.இவ்வாறு செய்வது அவர்களின் நலனுக்கு ஏற்றதாயிருக்கும். ஆனால், தீண்டாதவர்களுக்கு இதை எதிர்த்து நிற்கும் சக்தி இல்லை. அவர்கள் ஏதேனும் ஊதியம் பெற்றாக வேண்டும். இல்லையென்றால் பட்டினிதான். பேரம் பேசும் சக்தியும் அவர்களுக்கு இல்லை. நிர்ணயிக்கப்படும் ஊதியத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்; இல்லையென்றால் அவர்கள் வன்முறைக்கு உள்ளாவார்கள்.
தீண்டாதவர்களுக்குக் கொடுக்கப்படும் ஊதியம் பணமாகவோ அல்லது தானிய மாகவோ கொடுக்கப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் தீண்டாதோருக்குக் கொடுக்கப்படும் தானியம் “கோபரஹா” எனப்படுகிறது .”கோபரஹா” என்றால் ஒரு விலங்கின் சாணத்தில் உள்ள தானியம் என்று பொருள். மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தானியம் விளைந்து, முற்றிப் பயிர் அறுவடையாகி, உலர்த்தப்பட்டுக் களத்து மேட்டில் பரப்பப்படுகிறது. அதன்மேல் மாடுகள் சுற்றிச்சுற்றி நடக்கவிடப்படுகின்றன. இந்த மாடுகளின் குளம்புகளால் மிதிக்கப்பட்டு தானியம் வைக்கோலிலிருந்து பிரிக்கப்படுகிறது. இவ்வாறு பிணையலடித்துச் சுற்றிவரும் போது, மாடுகள் வைக்கோலையும் அதனுடன் சேர்ந்துள்ள தானியத்தையும் தின்றுவிடு கின்றன. இவற்றை மாடுகள் அளவுக்கதிமாகத் தின்றதால் சரியாகச் செரிக்காமல் மறுநாள் சாணத்துடன் தானியமும் சேர்ந்து வெளியாகிறது. இந்தச் சாணத்தை வடிகட்டி அதிலிருந்து தானியம் பிரித்தெடுக்கப்படுகிறது. இந்தத் தானியம் தீண்டாதவர்களான தொழிலாளர்களுக்கு ஊதியமாகக் கொடுக்கப்படுகிறது. இதைத்தான் அவர்கள் மாவாக்கி ரொட்டி செய்து உண்டார்கள்…
-அம்பேத்கரின் “எழுத்தும் பேச்சும் ”
தொகுதி -9,இயல் -7

