பி.பி. மண்டல் எனப்படும் சமூகநீதிப் போரின் நாயகன் பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல், பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். எனினும், இந்தியாவின் கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்றிய “மண்டல் கமிஷன்” (இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்) தலைவராகவே அவர் உலகப்புகழ் பெற்றார்.
1979-ஆம் ஆண்டு அப்போதைய ஜனதா கட்சி அரசாங்கத்தால், பிரதமர் மொரார்ஜி தேசாய் காலத்தில் பி.பி. மண்டல் தலைமையில் இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. இந்தியாவின் மக்கள் தொகையில் சரிபாதிக்கும் மேலாக உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (OBC) சமூக மற்றும் கல்வி நிலையை ஆய்வு செய்வதே இதன் நோக்கம்.
சென்னை பெரியார் திடலுக்கு பி.பி. மண்டல் அவர்கள் வருகை தந்து கி. வீரமணி அவர்களைச் சந்தித்தார்.
குறிப்பாக, 30.6.1979 அன்று அவர் பெரியார்
மண்டல் கமிஷன் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, 11 அளவுகோல்களின் அடிப்படையில் தரவுகளைச் சேகரித்தது.
1980-இல் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
இந்திய மக்கள் தொகையில் 52% பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) எனக் கண்டறியப்பட்டது.
ஒன்றிய அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இவர்களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் எனப் பரிந்துரைத்தது.
பி.பி. மண்டல் தனது அறிக்கையில் ஒரு மிக முக்கியமான கருத்தைக் குறிப்பிட்டிருந்தார்: “தகுதியற்ற இருவரைச் சமமாக நடத்துவது எப்படி அநீதியோ, அவ்வாறே தகுதியற்ற நிலையில் உள்ள இருவரைச் சமமாகப் போட்டியிடச் சொல் வதும் அநீதியாகும்.”
அவரது இந்தச் சிந் தனை, வெறும் வேலை வாய்ப்பு என்பதையும் தாண்டி, ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் அதிகார மய்யங்களில் பங்கெ டுப்பதற்கான வாயிலைத் திறந்து விட்டது.
அவர் மறைந்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு, 1990-இல் அப்போதைய பிரதமர் வி.பி. சிங் தலைமையிலான அரசு மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இடஒதுக்கீட்டை அமல் படுத்தியது.
பி.பி. மண்டல் அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்காக மட்டும் உழைக்கவில்லை; இந்திய ஜனநாயகத்தில் சமூகச் சமநிலை ஏற்பட வேண்டும் என்பதற்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தார். “சமூகநீதியின் தந்தை”களில் ஒருவராக அவர் என்றும் போற்றப்படுகிறார்.
இன்று அவரது 44ஆவது நினைவு நாள் (13.4.2026)

