மோடி, அமித்ஷா துரோகம் – துணைபோகும் எடப்பாடி இந்திய கம்யூ., முன்னாள் மாநில செயலர் இரா.முத்தரசன் சாடல்

1 Min Read

விழுப்புரம், ஏப்.12  ‘‘பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் துரோகத்திற்கு பழனிசாமி துணை போகிறார்,” என இந்திய கம்யூ., முன்னாள் மாநில செயலர் இரா.முத்தரசன் பேசினார்.

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க., வேட்பாளர் லட்சுமணனை ஆதரித்து, இந்திய கம்யூ., முன்னாள் மாநில செயலர் இரா. முத்தரசன் வளவனுாரில் பிரச்சாரம் செய்தார்.

‘டில்லியில் ஆட்சி நடத்தும் கட்சி, ஜனநாயகத்தை முற்றிலுமாக நிராகரித்து சர்வாதிகாரப் பாதையில் நடக்கிறது.

தேர்தல் ஆணைய தலைவர் ஒரு தலைபட்சமாக செயல்படுவதால், அவரை பதவி நீக்கம் செய்யக்கோரி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் புகார் அளித்தால் மக்களவை மற்றும் மாநிலங்களவை தலைவர்கள் ஏற்க மறுக்கின்றனர்.

நாட்டில் அதிகமாக வரி செலுத்தும் மாநிலம் தமிழ்நாடு. ஆனால், தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்குவது மிக குறைவு. மோடி, அமித் ஷாவின் துரோகத்திற்கு பழனிசாமி துணை போகிறார். பழனிசாமி நாகரிகமாகப் பேச வேண்டும். முதலமைச்சரை பார்த்து அநாகரிமாக பேசுவது தவறு. இப்படிப்பட்ட தலைவர் தேவையா என வாக்காளர்கள், நடுநிலையாளர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

மதவாதப் பேச்சு!

சிறுபான்மையினர் மூட்டை முடிச்சுகளுடன் வெளியேற தயாராக இருக்க வேண்டுமாம்… மேற்குவங்க தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடியின் மதவாத பேச்சு.

 

 

 

 

 

 

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *