கருநாடக மாநில கழக புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு

2 Min Read

பெங்களூரு, ஏப். 12- பெங்களூரு திராவிடர் அகம். பெரியார் மய்யம். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அரங்கில் கருநாடக மாநில கழக புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்பு நிகழ்வு 29.3.2026 அன்று காலை 11 மணிக்கு மேனாள் பெங்களூர்த் தமிழ்ச் சங்கத் தலைவர் சி.கோ.தாமோதரன் தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது.

கழகக் கொடியை சோழிங்க நல்லூர் கழக மாவட்டக் காப்பாளர் இரா.தே.வீரபத்திரன் ‘பெரி யார் வாழ்க’ என்னும் பெரும் முழக்கத்தின் ஊடே ஏற்றி வைத்தார். காப்பாளர் மு.சானகிராமன் தந்தை பெரியார் அவர்களின் ஒளிப் படத்தினை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியின் தலைவர் சி.கோ.தாமோதரன் சிறப்பான கழக அமைப்பு குறித்தும், புதிய கழக நிர்வாகிகளின் சிறப்புகள் குறித்தும் விளக்க உரை நிகழ்த்தினார்.

2026 பிப்ரவரி 28ஆம் நாளில் பெங்களூருவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிவித்த புதிய கழகத் தோழர்கள் நிர்வாகப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டனர். மாநிலக் கழக நடவடிக்கைப் பதிவேடு மற்றும் அலுவலக அமைப்பு குறித்த கோப்புகள், கழகக் கொடியையும் காப்பாளர் மு.சானகிராமன், மாநிலத் தலைவர் சே.குண வேந்தன் அவர்களிடம் பலத்த கரவொலிக்கிடையே வழங் கினார். துணைத் தலைவராக ஜெ.அருண், செயலாளராக இரா.முல்லைக்கோ, துணைச் செயலாளராக கு.ஆனந்தன் ஆகியோர் பொறுப்பு ஏற்றுக் கொண்டனர். புதிய நிர்வாகி களுக்கு சி.கோ.தாமோதரன் சிறப்பு மிகு பயனாடை அணிவித்து சிறப்பித்தார். மேலும் ஏராளனமானோர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்நிகழ்விற்கு மூத்த உறுப் பினர் பு.ர.கஜபதி முன்னிலை வகித்தார்.

புதிய கழக நிர்வாகிகளைப் பாராட்டி தங்கவயல் ஆ.கரிகால் வளவன், சமூக செயல்பாட்டாளர் தி.நரசிம்ம மூர்த்தி, கருநாடகத் தமிழ் மக்கள் இயக்கத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் சி.இராசன், ஓசூர் கழக மாவட்டத் தலைவர் சு.வனவேந்தன், சமூகநீதிக்கான இதழியலாளர் சங்கத் தலைவர் முத்து மணி நன்னன், சென்னை நிமிர் இலக்கிய வட்ட அமைப்புத் தலைவர் கவிஞர் கா.பாபு சசிதரன், பெங்களூரு திருவள்ளுவர் சங்கத் தலைவர் எஸ்.டி.குமார், திராவிட முன்னேற்றக் கழக பொறுப்புக் குழு தலைவர் மொ.பெரியசாமி, செயலாளர் இரா.முல்லைக்கோ, சின்னப்பா, வெண்ணிலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

நிறைவாக திராவிட முன்னேற்றக் கழக பொறுப்புக் குழு உறுப்பினர் ந.இராமசாமி புதிய தலைவருக்கு வண்ணமிகு சிறப்புப் பயனாடை அணிவித்து, மைசூர் தலைப்பாகையும், முத்துமாலையும் அணிவித்து சிறப்பு செய்தார். அதே போன்று துணைத் தலைவர் ஜெ.அருண், செயலாளர் இரா.முல்லைக்கோ, துணைச் செயலாளர் கு.ஆனந்தன் ஆகியோர்களுக்கு சிறப்புமிகு பயனாடைகள் அணிவித்து சிறப்பு செய்தார். பின்னர் திராவிடர் கழக அமைப்பு, செயல்பாடுகள், புதிய நிர்வாகிகள் குறித்து நெடிய உரையினை நிகழ்த்தினார்.

மாநிலக் கழக காப்பாளர் மு.சானகிராமன், தலைவர் கே.குணவேந்தன் ஏற்புரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. சொற்பொழிவாளர்கள் அனை வருக்கும் கருநாடக மாநிலக் கழகத்தின் சார்பில் தலைவர், சே.குணவேந்தன் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். துணைத் தலைவர் ஜெ.அருண் அனைவருக்கும் பிரியாணி உணவு வழங்கி சிறப்பித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *