சாத்தான்குளம் காவல்நிலையப் படுகொலை வழக்கின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது!

1 Min Read

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 19 அன்று காவல்நிலையத்திற்கு ‘விசாரணை’ என்ற பெயரால் கொண்டு செல்லப்பட்ட ஜெபராஜ், பென்னிக்ஸ் என்ற தந்தை, மகன் ஆகிய இருவர், காவல்துறையினரின் கடுமையான தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டனர். அய்ந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இவ் வழக்கில், காவல்துறை ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள் 9 பேரும்  குற்றவாளிகளே என்று கடந்த 23.3.2026 அன்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், தீர்ப்பின் முழு விவரமும், தண்டனை விவரங்களும் நேற்று முன் தினம் (6.4.2026) நீதிபதி அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளன.

இப் படுகொலைகள் மனித கண்ணியத்தை மீறும் செயலாக அமைந்திருக்கின்றன என்று கூறியுள்ள நீதிபதி, குற்றவாளிகள் அனைவருக்கும் இரட்டை மரண தண்டனை, சிறைத் தண்டனை, அபராதங்கள் உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை வழங்கியுள்ளார்.

காவல்துறையில் சிலரின் அதிகார அத்துமீறல்கள் எத்தகைய கொடூர நிகழ்வுகளுக்குக் காரணமாகி விடுகின்றன என்பதுடன், காவல்துறைக்கே களங்க மாகவும் மாறி விடுகிறது.

காவல் மரணங்கள் நிகழாமல் எச்சரிக்கையுடன் இருக்க இத்தகைய கடும் தண்டனைகள் தவிர்க்கப்பட முடியாதவையே!

மனிதம் தழைக்கவும், பாதுகாக்கப்படவுமே காவல் துறை என்பதை மீண்டும் அழுத்தம் திருத்தமாக இந்தத் தீர்ப்பு சொல்கிறது.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *