கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 8.4.2026

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* அப்பட்டமான மிரட்டல்.. மகாராஷ்டிரா முதலமைச்சரின் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு. பாஜக வேட்பாளரை தேர்ந்தெடுத்தால் மட்டுமே மதுரைக்கு மெட்ரோ கொண்டு வருவோம் என்று பேரம் பேசுவதும், மிரட்டுவதும் மட்டும்தான் மகாராட்டிர முதலமைச்சருடைய வேலையா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.

* மத நம்பிக்கைகளை நீதிமன்றங்கள் பகுத்தறிவு, அறிவியல் அடிப்படையில் ஆராய முடியாதாம்: சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு வாதம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பார்ப்பன வேட்பாளர்கள் இல்லை: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்கள் குறித்த ஒரு குறிப்பிடத்தக்க உண்மை என்னவென்றால், அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மட்டுமல்லாமல், பா.ஜ.க. கூட ஒரு பார்ப்பன வேட்பாளரைக் கூட களமிறக்கவில்லை என்பதாகும் என்கிறார் கட்டுரையாளர் அருண் ஜனார்த்தனன்.

* மணிப்பூரில் மீண்டும் வன்முறை: வீடு மீது குண்டு வீச்சு 2 குழந்தைகள் பரிதாப பலி: வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைப்பு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ‘பேன்களை போல பொறுக்கி நீக்கப்பட்டனர்’: எஸ்.அய்.ஆர். செயல்முறைக்கு பிறகு 91 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், சிறுபான்மைச் சமூகங்கள் குறி வைக்கப்படுவதாக மம்தா குற்றச்சாட்டு

தி இந்து:

* பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்த ஒன்றிய அரசின் திட்டம், ஓபிசி இட ஒதுக்கீட்டிற்கான மன்மோகன் சிங் அரசின் வரைபடத்தைப் பின்பற்றுவதாக கூறுகிறார் வர்கீஸ் ஜார்ஜ். மக்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543-லிருந்து 816-ஆக (இருக்கைகளில் 50% அதிகரிப்பு) உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கூடுதலாக 273 இடங்கள் உருவாக்கப்படும்; இந்த 273 இடங்கள் — அதாவது 816-இல் 33% — பெண்களுக்கு ஒதுக்கப்படும். இதே கணக்கீடு மாநில அளவிலும் பொருந்தும். உதாரணமாக, கேரள மாநிலத்தின் மக்களவை இடங்கள் 20-லிருந்து 30-ஆக உயர்த்தப்படும்; இதில் 10 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்கிறார் கட்டுரையாளர்.

தி டெலிகிராப்:

* சமையல் எரிவாயு நெருக்கடி காரணமாக உ.பி. தொழிலாளர்கள் வெளியேறும் அவலம்: போரினால் ஏற்பட்ட எல்பிஜி (LPG) நெருக்கடியின் காரணமாக, தேசியத் தலைநகர் பிராந்தியத்திலிருந்து தொழிற்சாலை தொழிலாளர்கள் வெளியேறுவது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. புதுடில்லியில் இருந்து வெறும் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள, உத்தரப்பிரதேசத்தின் முக்கியத் தொழில் மாவட்டமான காஜியாபாத், இதனால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ‘பகுஜன் தொழில் முனைவோர் ஏன் புறக்கணிக்கப்படு கிறார்கள்? ரூ. 16,500 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பொதுப்பணி ஒப்பந்தங்களில், தாழ்த்தப்பட், பழங்குடியினர் மற்றும் ஓபிசி-க்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பங்கு குறித்து ஏன் எந்த தரவுகளும் பராமரிக்கப்படவில்லை என்று ராகுல் காந்தி மோடி அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பான எந்தப் பதிவுகளும் இல்லை என்று நாடாளுமன்றம் அவருக்குத் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஒன்றிய அரசு “வேண்டுமென்றே கட்டமைக்கப்பட்ட ஒரு புறக்கணிப்பு அமைப்பை” வளர்ப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *