நடிகர்கள் பின்னால் செல்லும் இளைஞர்கள்; எச்சரிக்கிறார் ரஜினி! படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என்று அறிவுரை

1 Min Read

சென்னை, ஏப். 8- நடிகர்கள் பின்னால் போக வேண்டாம் என்று ரஜினி மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று (8.4.2026) செய்தியாளர் களிடம் நடிகர் ரஜினி கூறியதாவது:

நடிகர்கள் பின்னால் செல்லும் இளைஞர்கள் தான் மிகவும் எச்சரிக்கை யாக  இருக்க வேண்டும். அவர்களுக்கு ஏதாவது அடிபட்டால் அவர்களுக் குத் தானே காயம் ஆகும். இளைஞர்களுக்குப் படிப்பதில் மட்டும் தான் முழு கவனம் இருக்க வேண்டும்.

படிக்கிற காலத்தில், படிக்காமல் இருந்தால் வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்பட வேண்டி இருக்கும். அதை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு இளைஞர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவேண்டும்.

முதலில் உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இந்தக் காலகட்டத்தில்  இளைஞர்களுக்கு முதலில் சொல்வது,  இளைஞர்களே, குடிப் பழக்கத்திற்கும், கஞ்சா பழக்கத்திற்கும் தயவுசெய்து அடிமை ஆகாதீர்கள்.

அதில் அடிமையா னால் உங்கள் வாழ்க் கையே கெட்டுப் போய் விடும். அது உங்களை மட்டுமல்ல, உங்கள் தாய், தந்தை மற்றும் குடும்பம் என எல்லோருடைய வாழ்க்கையையும் நாச மாக்கிவிடும். அதனால், அது போன்ற நண்பர் கிடைத்தால் அவர்கள் கிட்டே கூட போகாதீர்கள். தூர விலகிவிடுங்கள்.

இவ்வாறு நடிகர் ரஜினி செய்தியாளர்களிடம் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *