விஜய் கட்சி நிர்வாகியின் உண்மை முகம் இதுதான் பாலியல் சீண்டலில் சிக்கி நீதிமன்ற விசாரணையில் இருக்கும் தவெக வேட்பாளர்

2 Min Read

சென்னை, ஏப்.5 பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பூவிருந்தவல்லி தொகுதி தவெக வேட்பாளர் பிரகாசத்துக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளராக இருக்கும் பிரகாசம் என்கிற குட்டி சில மாதங்களுக்கு முன் திருவள்ளூரில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அப்போது, அங்கிருந்த மகளிர் அணி நிர்வாகி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து தவெக தலைமைக்கு புகார் கொடுத்தபோது நடவடிக்கை எடுப்பதாக கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால், திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது கணவருடன் சென்று பாலியல் சீண்டல் அளித்த பிரகாசம் மீது நடவடிக்கை எடுக்க கோரி அந்த பெண் புகார் கொடுத்திருந்தார். அவர் புகாரின் அடிப்படையில் திருவள்ளூர் நகர் காவல்துறையினர் பிரகாசம் மீது 6 பிரிவின் கீழ் காவல்துறையினர்வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் பூவிருந்தவல்லி தொகுதி தவெக வேட்பாளராக பிரகாசம் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி பிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, பிரகாசத்திற்கு தரப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி புகார் அளித்த பெண் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் வேட்பாளருக்கு எதிராக புகார் அளித்ததால் தனக்கு தொடர்நது மிரட்டல் வருகிறது. தனது ஒளிப்படங்களுடன் சமூக வலைதலைங்களில் அவதூறு கருத்துகள் பரப்பப்பட்டு வருகிறது. அதன் காரணமாக பள்ளியில் படிக்கும் தனது குழந்தைகள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பிரகாசத்திற்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *